அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு கவர்னர் அழைப்பு கண்டன ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு

Updated : செப் 20, 2019 | Added : செப் 18, 2019 | கருத்துகள் (46+ 67)
Advertisement
ஸ்டாலினுக்கு,கவர்னர்,அழைப்பு,கண்டன,ஆர்ப்பாட்டம்,ஒத்திவைப்பு

சென்னை:தி.மு.க., தலைவர், ஸ்டாலின், முதன்மை செயலர், டி.ஆர்.பாலு ஆகியோர், நேற்று மாலை, சென்னையில், கவர்னர், பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசினர். பின், அறிவாலயம் வந்து, எம்.பி.,க்களுடன் ஆலோசனை நடத்தினர். அதன்பின், ஸ்டாலின் கூறியதாவத



கவர்னர் சந்திக்க விரும்புவதாக, அழைப்பு வந்தது. அதை ஏற்று, அவரை சந்தித்தேன். அப்போது, 20ம் தேதி, தமிழகம் முழுவதும், தி.மு.க., கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து, அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்திற்கான காரணத்தை விளக்கினோம். அதைத் தொடர்ந்து, 'மத்திய உள்துறை அமைச்சரின் கருத்து, தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது; தமிழகத்தில், எந்த நிலையிலும், ஹிந்தி திணிக்கப்படாது' என, திட்டவட்டமாக கூறினார்.

இதை, மத்திய அரசு கூற முன்வருமா எனக் கேட்டதற்கு, 'நான் மத்திய அரசின் பிரதிநிதி. மத்திய அரசு கூறி தான்,உங்களிடம் கூறுகிறேன்' என்றார்.அதை தொடர்ந்து,மத்திய உள்துறை அமைச்சர், அமித்ஷா, ஊடகங்கள் வழியே, வெளியிட்ட செய்தியில், 'இந்தியாவின் ஒரே மொழியாக, ஹிந்தி தான் இருக்க வேண்டும் என்று, நான் கூறவில்லை. நான் கூறியதை தவறாக புரிந்து கொண்டுள்ளனர்' என, தெளிவாக கூறியுள்ளார்.

அவர் கூறிய கருத்தை மனதில் வைத்து, 20ம் தேதி, தமிழகம் முழுவதும், தி.மு.க., நடத்தவிருந்த, கண்டன ஆர்ப்பாட்டத்தை, தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம். எந்த நிலையிலும், ஹிந்தி திணிக்கப்பட்டால், கருணாநிதி வழியில் நின்று எதிர்ப்போம். தபால் நிலைய, ரயில் நிலைய தேர்வுகளை, தமிழில் நடத்த போராடினோம்; மத்திய அரசு, அந்த உத்தரவை திரும்ப பெற்றது. தற்போது, நாங்கள் அறிவித்த போராட்டத்தை தொடர்ந்து, விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பது, தி.மு.க.,விற்கு கிடைத்த வெற்றி.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (46+ 67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
21-செப்-201912:34:02 IST Report Abuse
oce எனக்கு பசிக்கிறது. இந்த பசி நேரத்தில் இப்படியொரு ஆலோசனை தேவையா. துரை முருகன் கடுப்பு.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
21-செப்-201912:30:31 IST Report Abuse
oce திமுகவுக்கு 37 எம்பிக்கள் இல்லை எனில் இந்தி போராட்டம் நடத்தமாட்டார். அவர்களை வைத்து பலீஞ்சடுகுடு ஆட்டம் ஆடலாமென்று பார்த்தார். மத்தியினர் தற்காலிகமாக சைடு வாங்கியுள்ளனர்.
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
21-செப்-201912:23:49 IST Report Abuse
oce அவனுங்க அப்படிதான் கத்துவானுங்க. இதை விட்டால் வேறெதுவும் தெரியாது. நாம் செய்வதை ரூட் மாற்றி செய்வோம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X