divorces increses in kerala | கேரளாவில் விவாகரத்து அதிகரிப்பு:ஒரே ஆண்டில் 10,926 வழக்குகள் | Dinamalar

பொது செய்தி

இந்தியா

கேரளாவில் விவாகரத்து அதிகரிப்பு:ஒரே ஆண்டில் 10,926 வழக்குகள்

Added : மே 07, 2011 | கருத்துகள் (2)

கண்ணூர்:கேரளாவில் கடந்தாண்டு மட்டும் பல குடும்ப நல கோர்ட்டுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள விவாகரத்து தொடர்பான வழக்குகள் எண்ணிக்கை மட்டும், 10,926 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் விவாகரத்து கோருவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.மாநிலத்தில் 1984ம் ஆண்டு சட்டப்படி, குடும்ப நல கோர்ட்டுகள் அமைக்கப்பட்டன. இவ்வாறு திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில், தலா இரண்டு வீதம், இக்கோர்ட்டுகள் செயல்படுகின்றன.
இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில், மிக அதிக எண்ணிக்கையில் விவாகரத்து வழக்குகளும், வயநாடு மாவட்டத்தில் குறைந்தளவு வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.கண்ணூர் பகுதியைச் சேர்ந்த வக்கீல் தாம்ஸ்ட்டின் கே. அகஸ்டின் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற விவரங்களின் அடிப்படையில் இத்தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி, மாநிலத்தில் விவாகரத்து கோருபவர்களின் எண்ணிக்கை, தலைநகர் திருவனந்தபுரத்தில், கடந்தாண்டு மட்டும் 1,747 ஆக இருந்தது.குறைந்தளவாக வயநாடு மாவட்டத்தில், 198 வழக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.
இது தவிர, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்ட குடும்ப நல கோர்ட்டுகளில், 10 ஆண்டுகளில், அதிர்ச்சி தரும் அளவுக்கு, இவ்வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எர்ணாகுளம் மாவட்ட குடும்ப நல கோர்ட்டில், 1999ம் ஆண்டு விவாகரத்து வழக்குகளாக, 196 வழக்குகளும், அதுவே 2010ம் ஆண்டு, 1,100 வழக்குகளாக அதிகரித்து விட்டது.அதேபோல், திருச்சூர் மாவட்ட குடும்ப நல கோர்ட்டில், 1999ம் ஆண்டு, 335 வழக்குகளாக இருந்த நிலை மாறி, 2010ம் ஆண்டு மட்டும், 1,059 ஆக அதிகரித்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில், 1999ம் ஆண்டு, 663 ஆக இருந்த வழக்குகள், 2010ம் ஆண்டு 716 ஆக மட்டுமே அதிகரித்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X