மக்களை சந்திக்கிறார் தமிழிசை: தெலுங்கானா அரசு கடுப்பு

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (43)
Advertisement
மக்களை சந்திக்கிறார் தமிழிசை

ஐதராபாத், :தெலுங்கானா மாநில கவர்னராக சமீபத்தில் பதவியேற்றுள்ள தமிழக பா.ஜ. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க முடிவு செய்துள்ளார். இது ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்து உள்ளது. இம்மாநிலத்தில் சமீபத்தில் தமிழக பா.ஜ. முன்னாள் தலைவரான தமிழிசை சவுந்தரராஜன் கவர்னராக பதவியேற்றார்.




இந்நிலையில் தமிழிசை பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்க முடிவு செய்துள்ளார். இம்மாநிலத்தைச் சேர்ந்த மஜ்லிஸ் பச்சாவ் தெஹ்ரிக் அமைப்பின் தலைவர் அஜ்மத் உல்லாஹ் கான் சமூக வலைதளத்தில் 'மக்களை சந்தித்து குறைகளைகேட்பீர்களா' என கேட்டிருந்தார். அதற்கு அளித்த பதிலில்'மக்களை சந்திக்க ஏற்கனவே திட்டமிட்டு உள்ளேன்' என தமிழிசை கூறி உள்ளார்.இது ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசுக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

''கவர்னர் பதவி என்பது அரசியல் சாசனப் பதவி. மற்ற மாநிலங்களிலும் கவர்னர்கள் இதுபோல மக்கள் குறைகளை கேட்டால் சட்டவிதிகள் அனுமதி அளித்தால் அவர் மக்களை சந்திப்பதில் எந்தவித ஆட்சேபனையும் இல்லை'' என தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி செய்தித் தொடர்பாளரும் சட்டசபை கொறடாவுமான ராஜேஸ்வர் ரெட்டி கூறியுள்ளார்.கட்சியின் மூத்த தலைவர்கள் கூறியதாவது:அவர் ஒன்றும் மக்கள் பிரதிநிதி இல்லையே. எப்படி மக்களை சந்தித்து குறைகளை கேட்கலாம். அதற்கு தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. தன் பதவிக்குரிய எல்லையை மீறாமல் இருப்பார் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
20-செப்-201910:53:48 IST Report Abuse
Sampath Kumar ஜூனியர் கிரண் பேடி
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
19-செப்-201922:03:13 IST Report Abuse
oce பொகாத ஊருக்கு எதற்கு வழி. கவர்னர் இந்தி படித்து மக்கள் குறைகளை கேட்கலாம். அப்படியானால் மற்ற மாநில கவர்னர்கள் அந்தந்த மாநில மொழிகளை கற்க முடியுமா. இது தான் அவர்கள் வேலையா. மொழி பெயர்ப்பாளர் அவருடன் இருந்து பிரச்சினைகளை புரிய வைப்பார். கவலை இல்லை. தமிழ் நாட்டில் தமிழன் இந்தி படிக்க்ககூடாது. ஆனால் அவன் வெளி மாநிலங்களில் குடியேறினால் அவன் அங்கிருக்கும் மொழியை பேசுவது எப்படி. இவனும் படுக்க மாட்டான். அடுத்தவனையும் படுக்க விடமாட்டான்.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
20-செப்-201909:42:49 IST Report Abuse
Chowkidar NandaIndiaசரியாக சொன்னீர்கள். யானை தன் தலையில் தானே மண்ணள்ளிப்போட்டுக் கொள்வது என்பது இதுதான். டுமிளர்கள் திருந்தப்போவது எப்போதோ?...
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
19-செப்-201921:56:04 IST Report Abuse
oce இந்திய மாநிலங்களில் ஆட்சியினரின் அன்றாட நடப்புகள் செய்திகளாக மக்களுக்கு தெரிகின்றன. ஆனால் இது வரை தெலுங்கானாவில் என்ன நடக்கிறது என்பது எவருக்கும் தெரிவதில்லை. அதற்க் விடிவு காலம் வந்துள்ளது. சந்திர சேகர ராவ் மூடு மந்திர பேர்வழி. பக்கா சுயநல விரும்பி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X