பொது செய்தி

தமிழ்நாடு

கட்சி கொடி கம்பங்கள் அதிரடி அகற்றம்

Added : செப் 19, 2019 | கருத்துகள் (18)
Advertisement
 கட்சி கொடி, கம்பங்கள், அகற்றம், நிரந்தர தடை,கோரிக்கை

தாம்பரம்:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, ஜி.எஸ்.டி., சாலையில் பொருத்தப்பட்டிருந்த, கட்சிகளின் ராட்சத கொடி கம்பங்கள், நேற்று அகற்றப்பட்டன.

பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில், மையத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்து, குரோம்பேட்டையைச் சேர்ந்த, மென்பொறியாளர், சுபஸ்ரீ, 23, பரிதாபமாக உயிரிழந்தார்.இச்சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்கள், அகற்றப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, ஜி.எஸ்.டி., சாலையில், தாம்பரம் சானடோரியத்தில், 'மெப்ஸ்' நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த, பல்வேறு கட்சிகளின் ராட்சத கொடிக் கம்பங்களையும் அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, அந்த கொடிக் கம்பங்கள், நேற்று முன்தினம் இரவு, நெடுஞ்சாலைத்துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அகற்றப்பட்டன. நகரின் மற்ற பகுதிகளில், விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள, கட்சி கொடி கம்பங்களையும் அதிகாரிகள் அகற்றுவதுடன், சாலையோரங்களில் கட்சி கொடி கம்பங்கள் நட, நிரந்தர தடை விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனி - Bangalore,இந்தியா
19-செப்-201913:30:06 IST Report Abuse
சீனி அப்படியே அந்த சமாதிக்கு வெக்குற மாதிரி தலைவர் பேரோட கல்வெட்டு வெச்சுருக்காங்களே, அதையும் உடைச்சு குப்பைல போடுங்க பல சுபஸ்ரீ மாதிரி அப்பாவி உயிருங்க சமாதிக்கு போகாம தடுக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-செப்-201913:17:56 IST Report Abuse
இந்தியன் kumar நல்ல நிகழ்வு வரவேற்க கூடியது.
Rate this:
Share this comment
Cancel
Ravanan Ramachandran - Chennai,இந்தியா
19-செப்-201912:42:27 IST Report Abuse
Ravanan Ramachandran கொடிக்கம்பங்கள் அகற்றினாலும் அதற்கு அடியில் பொருத்தப்பட்டுள்ள ஆணிகள் நீட்டிக்கொண்டிருப்பதை பார்க்கும்போது பயமே ஏற்படுகின்றது..யாராவது தடுக்கி விழுந்தால் நெஞ்சில் குத்தி பயங்கர விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது... அதிகாரிகள் இதை கவனிப்பார்களா அல்லது மற்றும் ஒரு மனித உயிர் பலி வாங்கியபிறகு நடவடிக்கை எடுப்பார்களா....பொறுத்து இருந்து பார்க்கவேண்டும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X