சின்மயானந்த் விவகாரம்: மாணவி தீக்குளிப்பு மிரட்டல்

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (21)
Advertisement

ஷாஜகான்பூர் : ''முன்னாள் மத்திய அமைச்சர் சின்மயானந்தை கைது செய்யாவிட்டால் தீக்குளிப்பேன்'' என அவர் மீது பாலியல் புகார் கூறியுள்ள மாணவி மிரட்டியுள்ளார்.






உத்தர பிரதேசத்தில் உள்ள ஷாஜகான்பூரை சேர்ந்தவர் சுவாமி சின்மயானந்த் 72. பா.ஜ. மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது மத்திய அமைச்சராக இருந்தார். இந்நிலையில் இவர் நடத்தி வரும் சட்டக்கல்லுாரியில் படித்து வரும் மாணவி ஒருவர் சின்மயானந்த் தன்னை ஓராண்டுக்கு மேலாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டினர்.





இது பற்றி விசாரிக்க உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் மாநில அரசு சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. இந்தக் குழு சின்மயானந்தின் வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியது. சின்மயானந்தின் படுக்கை அறையில் சில ஆதாரங்களை சிறப்பு புலனாய்வு குழு சேகரித்தது. புகார் தொடர்பான ஆதாரங்களை ஒரு 'பென் டிரைவில்' பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழுவிடம் மாணவி வழங்கினார். இதன்பின் அந்த மாணவி 16ம் தேதி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி கீதிகா சிங்கிடம் வாக்குமூலம் அளித்தார்.





பாலியல் புகார் கூறிய மாணவி கூறியதாவது: மாஜிஸ்திரேட் முன்னிலையில் என் வாக்குமூலத்தை பதிவு செய்து இரண்டு நாட்களாகி விட்டது. ஆனால் போலீசார் சின்மயானந்தை இன்னும் கைது செய்யவில்லை. சின்மயானந்தை உடனடியாக கைது செய்யாவிட்டால் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிப்பேன். சின்மயமானந்த் மீது சிறப்பு புலனாய்வு குழு இன்னும் வழக்கு பதிவு செய்யாதது ஏன் என தெரியவில்லை. இவ்வாறு கூறினார்.






மருத்துவமனையில் சின்மயானந்த்

சின்மயானந்தின் வழக்கறிஞர் கூறியதாவது: சின்மயானந்த் கடந்த இரண்டு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து ஷாஜகான்பூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்டார். அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-201915:27:08 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் ஒரு வருடம் புகார் கொடுக்க முடியவில்லை, இப்போது புகார் கொடுத்திருக்கிறாய் , அதை விசாரித்து தான் கைது செய்ய முடியும், நீ நினைத்த நேரத்தில் செய்ய முடியாது, மேலும் அவர் அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெறுகிறார், அரசு மருத்துவர் அறிக்கை கொடுப்பார் , ஆகவே கொஞ்சம் பொறுத்திரு.
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
20-செப்-201910:05:41 IST Report Abuse
Sanny .....?...
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
19-செப்-201913:01:33 IST Report Abuse
chander ஆ ஊ ன்னா ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கிறாங்க
Rate this:
Share this comment
Cancel
chander - qatar,கத்தார்
19-செப்-201912:59:19 IST Report Abuse
chander இந்த பிஜேபி ஆசாமியை இன்னும் கைது பண்ணாமல் கூஜா தூக்கிட்டு அலைகிறாங்களா இதுவே பாமரன் என்றால் உடனே உள்ளே அனுப்பியிருப்பாங்க என்ன ஞாயம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X