திருப்பதி தேவஸ்தான குழுவில் தமிழர்கள் நியமனம்

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement

திருப்பதி : தமிழகத்தைச் சேர்ந்த நால்வர் உட்பட 28 பேர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டதற்கான அரசாணையை ஆந்திர அரசு நேற்று (செப்., 18) வெளியிட்டது.



latest tamil news



ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவால் ஏற்படுத்தப்பட்ட திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது. அதன்பின் புதிய அரசு அறங்காவலர் குழு தலைவராக சுப்பா ரெட்டியை நியமித்தது. இவர் பதவி ஏற்று இரண்டு மாதங்கள் ஆன நிலையில் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களை நேற்று ஆந்திர அரசு நியமித்து அரசாணை வெளியிட்டது.


latest tamil news



இதற்கு முன் 16 உறுப்பினர்களுடன் இருந்த அறங்காவலர் குழுவை தற்போதைய அரசு 24 ஆக உயர்த்தியுள்ளது. இவர்களுடன் ஆந்திர அறநிலையத்துறை தலைமை செயலர், அறநிலையத் துறை கமிஷனர், தேவஸ்தான செயல் அதிகாரி, திருப்பதி நகர்புற வளர்ச்சி கழகத்தின் தலைவர் ஆகியோரும் அறங்காவலர் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil news



இந்த 28 பேரில் ஆந்திராவிலிருந்து எட்டு பேர்; தெலுங்கானாவிலிருந்து ஏழு பேர்; தமிழகத்திலிருந்து நால்வர்; கர்நாடகாவிலிருந்து மூவர்; தில்லி மகாராஷ்ட்ராவிலிருந்து தலா ஒருவருக்கு உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.


latest tamil news



தமிழகத்திலிருந்து வைத்தியநாதன், இந்தியா சிமென்டஸ் சீனிவாசன், டாக்டர் நிச்சிதா மற்றும் உளுந்துார் பேட்டை எம்.எல்.ஏ. குமரகுரு உள்ளிட்டோர் திருப்பதி அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
21-செப்-201916:51:05 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை 4 பேர் தமிழ் இனம்னு போட்டா மட்டும் போதாது. அப்படியே மீதி இருக்கிற 24 பேர் எந்த இனம்னு சொல்லிட வேண்டியது தானே. அப்புறம் பிரிச்சி பேசுறாங்கன்னு சொல்றது. அறிவிலிகள்.
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
19-செப்-201910:27:41 IST Report Abuse
PR Makudeswaran முன்னே போன கடிக்குது பின்னே போன உதைக்குது
Rate this:
Cancel
krish - chennai,இந்தியா
19-செப்-201909:15:59 IST Report Abuse
krish ஒவ்வொரு அரசு முடிவுகளில், குறை, களங்கம் கற்பிப்பது, அவரவர் எண்ண ஓட்டம், நோக்கம் பொறுத்தது. ஏழுமலையான் எதற்கும் துணை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X