ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

Added : செப் 19, 2019
Share
Advertisement
 ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிப்பு

புதுடில்லி : ரயில்வே ஊழியர்களுக்கு, 78 நாள் ஊதியம், பண்டிகை கால போனஸாக வழங்கப்படும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது.கூட்டத்துக்கு பின், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:ரயில்வேயில் பணியாற்றும், 11 லட்சத்து, 52 ஆயிரம் ஊழியர்களுக்கு, 78 நாள் சம்பளத்தை, பண்டிகை கால போனஸாக வழங்க, பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம், அரசுக்கு, 2,024 கோடி ரூபாய் செலவு ஏற்படும். ரயில்வே ஊழியர்களுக்கு தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, இந்த போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X