ராகுலுக்கு 'சாவர்க்கர்' புத்தகப்பிரதி: உத்தவ் தாக்கரே

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (27)
Advertisement

மும்பை: 'சுதந்திரம் அடைந்த போது, சாவர்க்கர் மட்டும் பிரதமராக இருந்திருந்தால் இந்திய பிரிவினை நடந்திருக்காது' என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.






இந்தியாவை ஒரு ஹிந்து நாடாக உருவாக்க வேண்டும் என்ற 'ஹிந்துத்துவா' கருத்தாக்கத்தை பிரபலப்படுத்தியவர், சாவர்க்கர். இவரை பற்றி விக்ரம் சம்பத் என்பவர் எழுதி 'சாவர்க்கர்: மறக்கப்பட்ட கடந்த காலத்தின் எதிரொலி' என்ற புத்தக வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கலந்து கொண்டார்.





அவர் பேசியதாவது: நாட்டின் வளர்ச்சிக்கு காந்தி, நேருவின் பணிகளை நாங்கள் மறுக்கவில்லை. அதுபோல், நாட்டின் அரசியல் சூழல், இரண்டு குடும்பங்களுக்கு மட்டும் உரியது அல்ல.

சாவர்க்கர் 14 ஆண்டுகள் சிறையில் அனுபவித்ததை, வெறும் 14 நிமிடங்கள் நேரு அனுபவித்திருந்தால், அவரை நான் வீரர் என அழைத்திருப்பேன். நாடு சுதந்திரம் அடைந்த போது, சாவர்க்கர் மட்டும் பிரதமராக இருந்திருந்தால், இந்திய பிரிவினை நடந்து, பாகிஸ்தான் என்ற நாடே உருவாகி இருக்காது. சாவர்க்கருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.





வீர சாவர்க்கரை தரக்குறைவாக விமர்சனங்கள் செய்து வரும் ராகுலுக்கு இப்புத்தகத்தின் ஒரு பிரதியை அனுப்பி வைக்க வேண்டும். இதனை படித்தாவது, ராகுல் தெரிந்து கொள்ளட்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-செப்-201912:43:47 IST Report Abuse
Nallavan Nallavan தனது ஆக்கிரமிப்பை நிலைநாட்டப் போராடிய திப்பு சுல்தான் தியாகி.. சக தியாகிகளோடு இணைந்து போராட எண்ணி, கடிதம் எழுதிக்கொடுத்த சாவர்க்கர் போராளியல்லர் ......
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
19-செப்-201912:41:56 IST Report Abuse
Nallavan Nallavan கற்பூர வாசனை கட்டாயம் தேவையா பப்புவுக்கு ??
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
19-செப்-201912:51:40 IST Report Abuse
வல்வில் ஓரி இந்த ஸ்ட்ராட்டஜி நல்லாயிருக்கே.. சூப்பர்....
Rate this:
Share this comment
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
19-செப்-201912:09:57 IST Report Abuse
Rpalnivelu வீர் சாவர்கர் ஒரு முரட்டு தேச பக்தர். அவரை போன்று அந்தமான் சிறையில் கொடுமையை அனுபவித்தவர்கள் மிகக் குறைவு. நம்ம நேரு மாமாவை அங்கே ஏன் சிறையிலடைக்கவில்லை?
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
19-செப்-201912:55:05 IST Report Abuse
வல்வில் ஓரி எல்லாம் அந்த வெள்ளைக்கார பிரபுவோட ஊட்டுக்கார அம்மிணி கருணை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X