பொது செய்தி

இந்தியா

அபராதத்தை எதிர்த்து 'ஸ்டிரைக்'; 35 லட்சம் லாரிகள் இன்று ஓடாது

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (20)
Advertisement

புதுடில்லி: புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று(செப்.,19) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.






மத்திய அரசு சமீபத்தில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை நிறைவேற்றியது. இதில் வாகனம் ஓட்டுனர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அபராத கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. அதேபோல் சாலை விதிமீறல்களுக்கு பத்து மடங்கு அபராதத் தொகையை உயர்த்தியது. இதைக் குறைக்க வலியுறுத்தி 'அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ்' என்ற அமைப்பு இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கிறது.





இதில் தமிழகத்தில் உள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்க உள்ளன. இதனால் இன்று காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை தமிழகத்தில் உள்ள 4.65 லட்சம் லாரிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 35 லட்சம் லாரிகள் ஓடாது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - coimbatore,இந்தியா
20-செப்-201900:18:39 IST Report Abuse
Raj இதனாலே நாட்டுக்கு நன்மை தான்...நீங்க வண்டிய ஓட்டாதீங்க...அரசு போராட்டம் செய்ப்பவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அத்தியாவசிய சேவைகளின் நிறுத்தினால் பொது மக்கள் பாதிக்கப்படாமலிருக்க புதிய அரசு லாரி சேவை ஆரம்பிக்க வேண்டும். அரசு கேபிள் டிவி விட இது முக்கிய தேவை.
Rate this:
Share this comment
Cancel
19-செப்-201914:13:01 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இவனுங்களுக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லையா? போக்குவரத்து வீதிமீறல் பண்ணாமல் வண்டி ஓட்டுவோம் என்று உறுதி மொழி எடுப்பதை விட்டுவிட்டு, அபராதத்தை குறையுங்கள், நாங்கள் வீதிமீறல் செய்து பொதுமக்கள் பலபேரை கொல்கிறோம், பிறகு குறைந்த அளவில் அபராதம் செலுத்துகிறோம் என்று சொல்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Venkatesh - Chennai,இந்தியா
19-செப்-201912:56:11 IST Report Abuse
Venkatesh மடியில் கணம் இருந்தால் தான் பயம் ஏற்படும், சாலை விதிகளை ஒழுங்காக பின் பற்றுவதர்கே அபராத தொகையை உயர்த்தி உள்ளார்கள் , இதை புரிந்து கொள்ள முடியாத மூடர்கள் தான் இப்படி பட்ட காரியம் செய்ய இறங்குவார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X