அபராதத்தை எதிர்த்து ஸ்டிரைக்; 35 லட்சம் லாரிகள் இன்று ஓடாது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அபராதத்தை எதிர்த்து 'ஸ்டிரைக்'; 35 லட்சம் லாரிகள் இன்று ஓடாது

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (20)

புதுடில்லி: புதிய மோட்டார் வாகன சட்டத்தின்படி உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை குறைக்க வலியுறுத்தி நாடு முழுவதும் இன்று(செப்.,19) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய லாரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.






மத்திய அரசு சமீபத்தில் திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை நிறைவேற்றியது. இதில் வாகனம் ஓட்டுனர் தொடர்பான நடவடிக்கைகளுக்கு அபராத கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. அதேபோல் சாலை விதிமீறல்களுக்கு பத்து மடங்கு அபராதத் தொகையை உயர்த்தியது. இதைக் குறைக்க வலியுறுத்தி 'அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ்' என்ற அமைப்பு இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்கிறது.





இதில் தமிழகத்தில் உள்ள மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், மாநில லாரி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் பங்கேற்க உள்ளன. இதனால் இன்று காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை தமிழகத்தில் உள்ள 4.65 லட்சம் லாரிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 35 லட்சம் லாரிகள் ஓடாது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X