பொது செய்தி

இந்தியா

ரூ.1,800 கோடி செலவில் 199 புதிய சிறைகள்

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (15)
Advertisement

புதுடில்லி: சிறைகளில் இடப்பற்றாக்குறையை குறைக்கவும், கைதிகள் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை தடுக்கவும், 1,800 கோடி ரூபாய் செலவில், 199 புதிய சிறைகளை உருவாக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.






சிறை கைதிகள் இடையே, குற்ற நடவடிக்கைகள் அதிகரிப்பதை தடுப்பது தொடர்பாக, தேசிய அளவிலான இரண்டு நாள் கருத்தரங்கு, டில்லியில் நடந்தது. போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம், இதை ஏற்பாடு செய்திருந்தது. இந்த கருத்தரங்கில், மத்திய உள்துறை இணை அமைச்சர், கிஷன் ரெட்டி கலந்து கொண்டார். போலீஸ் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர், வி.எஸ்.கே.கமூடி, டில்லி திஹார் சிறை, டி.ஜி.பி., சந்தீப் கோயல் உட்பட, பல உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.





கருத்தரங்கில், மத்திய உள்துறை இணை அமைச்சர், கிஷன் ரெட்டி பேசியதாவது: நாடு முழுவதும் உள்ள சிறைகளில், கைதிகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் சம்பவங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சிறைகளில், இடப்பற்றாக்குறை இருப்பது, இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சிறைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் மட்டுமே, இதை சமாளிக்க முடியும். எனவே, 1,800 கோடி ரூபாய் செலவில், 199 புதிய சிறைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த சிறைகள், கைதிகளுக்கு பாதுகாப்பானதாகவும், மறுவாழ்வு அளிக்கும் மையங்களாகவும் உருவாக்கப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-செப்-201914:15:27 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் போலி மதச்சாற்பற்றவாதம் பேசிய ஊழல்வாதிகள் அதிகம் பேரை அனுப்ப வேண்டி இருக்கிறது, ஆகவே தான் புதிய சிறைச்சாலை தேவை படுகிறது. பிறகு நாடு சுத்தமடையும்.
Rate this:
Share this comment
Cancel
S.P. Barucha - Pune,இந்தியா
19-செப்-201912:59:37 IST Report Abuse
S.P. Barucha கொடூர குற்றவழக்குகளில் ஈடுபட்டவர்களை அந்தமான் பகுதியில் புதிதாக சிறைகள் கட்டி அனுப்பலாம்.தண்டனை பெற்ற குற்றவாளிகளை வேலை வாங்க வேண்டும்.
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
19-செப்-201913:54:54 IST Report Abuse
Nathanஆம் , அவன் 72 வயது பசித்தவன் ஆனாலும்....
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
19-செப்-201912:28:27 IST Report Abuse
சுந்தரம் இந்த பத்து கோடி செலவில் கட்டப்படும் ஒவ்வொரு சிறைச்சாலை கட்டுமானத்தில் தவறு செய்பவர்களுக்கு கட்ட இருக்கும் 199 சிறை சாலைகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் கணம் கோர்ட்டார் அவர்களே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X