பொது செய்தி

இந்தியா

தேஜஸ் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத்

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (11)
Advertisement
Light Combat Aircraft, Tejas, war plane, Rajnath, Rajnath singh, Defence minister, தேஜஸ், போர் விமானம், ராஜ்நாத், ராஜ்நாத் சிங், பாதுகாப்பு அமைச்சர்

புதுடில்லி: முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, 'தேஜஸ்' போர் விமானத்தில், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று (செப்.,19) பயணித்தார்.

அரசு பொதுத்துறை நிறுவனமான, எச்.ஏ.எல்., முற்றிலும் உள்நாட்டிலேயே, தேஜஸ் ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்திய விமானப் படை, ஏற்கனவே, 40 தேஜஸ் ரக விமானங்களை வாங்குவதற்கு, 'ஆர்டர்' கொடுத்துள்ளது. சமீபத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, மேலும், 80 விமானங்களை வாங்கவும், ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடற்படை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட, தேஜஸ் விமானத்தை, வெற்றிகரமாக தரையிறக்கும் சோதனை முயற்சி, சமீபத்தில் கோவாவில் நடந்தது. இந்த விமானம் மணிக்கு 2,005 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறன் பெற்றது. மிக் -21 ரக விமானங்களுக்கு மாற்றாக இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதில் வெற்றி கிடைத்ததை அடுத்து, கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, எச்.ஏ.எல்., விமான நிலையத்தில் இருந்து, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், இன்று, தேஜஸ் விமானத்தில் பயணித்தார். இதன்மூலம், தேஜஸ் விமானத்தில் பயணிக்கும், நாட்டின், முதல் ராணுவ அமைச்சர் என்ற பெருமை, ராஜ்நாத் சிங்கிற்கு கிடைத்தது.மகிழ்ச்சி

சுமார் 30 நிமிடம், தேஜஸ் விமானத்தில் ராஜ்நாத் பறந்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: இந்த பயணம் மகிழ்ச்சியாகவும் வசதியாகவும் இருந்தது. போர் விமானங்கள் ஏற்றுமதி செய்யும் நிலையை இந்தியா அடைந்துள்ளது. ஏர் வைஸ் மார்ஷல் திவாரி கூறியபடி, தேஜஸ் விமானத்தை சிறிது நேரம் இயக்கி பார்த்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
19-செப்-201919:10:14 IST Report Abuse
Ramaraj P வாழ்த்துக்கள் இந்தியா
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
19-செப்-201916:43:04 IST Report Abuse
இந்தியன் kumar made in இந்தியா வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
19-செப்-201913:37:24 IST Report Abuse
Rajavelu E. ரபேல் என்ன ஆச்சு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X