அயோத்தி தீர்ப்பை அனைவரும் ஏற்பர்: அமித்ஷா

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (26)
Advertisement

ராஞ்சி : அயோத்தி வழக்கில் சுப்ரீம் கோர்ட் அளிக்கும் இறுதி தீர்ப்பை அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


சுப்ரீம் கோர்ட்டில் அயோத்தி வழக்கின் விசாரணை தினந்தோறும் நடந்து வருகிறது. அக்டோபர் 18ம் தேதிக்குள் அயோத்தி வழக்கு தொடர்பான அனைத்து வாதங்கள் மற்றும் விசாரணையை நிறைவு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் நேற்று (செப்.18) கெடு விதித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறும் நாளான நவம்பர் 17 அன்று அயோத்தி வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிலையில் அமித்ஷாவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் அரசு தயார் நிலையில் உள்ளதா, சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதை தடுக்க தயாராக உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அமித்ஷா, நான் கோயிலை கட்டப் போவதில்லை. தீர்ப்பின் அடிப்படையில் அறக்கட்டளை செயல்படும். ஏதாவது பிரச்னை ஏற்படும் சமயத்தில் கோர்ட்டை அடைகிறது. தீர்ப்பும் சமயத்தில் சிலர் ஆதரிப்பார்கள்; சிலர் எதிர்ப்பார்கள். ஆனால் முடிவில் அனைவரும் ஏற்றுக் கொள்வர்.
சுப்ரீம் கோர்ட் சுயமாகவே செயல்படுகிறது. யாருடைய விருப்பு- வெறுப்புக்களின் அடிப்படையில் செயல்படவில்லை. நீண்ட காலத்திற்கு பிறகு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வர உள்ளது. தற்போது தினந்தோறும் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. விரைவில் தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். அரசு, அயோத்தி விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தவில்லை. அனைத்து மதங்களையும் சமமாகவே நாங்கள் பார்க்கிறோம். அனைத்து மத வழிபாட்டு தலங்களும் ஒன்று தான் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201905:12:44 IST Report Abuse
Nepolian S ஏற்கனவே தீர்ப்பு எழுதி கொடுத்துவிட்டு ஏன் இந்த நாடகம்..
Rate this:
Share this comment
Cancel
Anbu -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201902:52:59 IST Report Abuse
Anbu What a pity....to build a Ramar temple in their own land ....God Pls.save our mother land Bharath....pls.... wait history will answer for this....who destroyed the same temple Supreme Court you are the most corrupted ....trained by
Rate this:
Share this comment
Cancel
Anbu -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201902:52:59 IST Report Abuse
Anbu What a pity....to build a Ramar temple in their own land ....God Pls.save our mother land Bharath....pls.... wait history will answer for this....who destroyed the same temple Supreme Court you are the most corrupted ....trained by
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X