டுவிட்டரில் நிர்மலா - பெண் தொழிலதிபர் கருத்து மோதல்

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (70)
Share
Advertisement

புதுடில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என விமர்சித்த பெண் தொழிலதிபர் கிரண் மசும்தர் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையே டுவிட்டரில் ஏற்பட்டுள்ள கருத்து மோதல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.latest tamil news


நேற்று (செப்.,18) நடந்த மத்திய அமைச்சர்கள் குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இ-சிகரெட்களுக்கு உடனடியாக தடை விதிக்க அமைச்சரவை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதற்கு டுவிட்டரில் கருத்து பதிவிட்ட பெண் தொழிலதிபரான கிரண் மசும்தர் ஷா, " இ-சிகரெட்களுக்கு தடை விதிப்பதாக செய்தியாளர் சந்திப்பில் அறிவித்துள்ள நிதியமைச்சர் ஏன் புகையிலை பொருட்களுக்கு தடை விதிக்கவில்லை? இதை நிதியமைச்சர் ஏன் வெளியிட வேண்டும்? அவர் சுகாதாரத்துறை அமைச்சர் இல்லையே?" என கேட்டிருந்தார். அத்துடன் , நிதியமைச்சராக பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்தும், அதற்காக என்ன செய்கிறீர்கள் என்பது பற்றியும் பேசுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் எனவும் கூறி இருந்தார்.


latest tamil news


இதற்கு பதிலளித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நிர்மலா சீதாராமன், "கிரண் அவர்களே, இந்த செய்தியாளர் சந்திப்பு அமைச்சரவை குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை தெரிவிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. பேச துவங்குவதற்கு முன்பே நான் கூறிவிட்டேன், அமைச்சரவை குழு கூட்டம் எனது தலைமையில் நடந்ததால் அதன் விபரங்களை கூறுகிறேன் என்று. அதுமட்டுமின்றி சுகாதாரத்துறை அமைச்சர் தற்போது சர்வதேச நாடுகளுக்கு பயணம் சென்றுள்ளார். அவர் நாட்டில் இல்லை. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரும் என்னுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு விளக்கம் அளித்தனர். இது தான் அரசு செய்தியாளர் சந்திப்பில் பின்பற்றப்படும் நடைமுறைகளை என்பது உங்களுக்கே தெரியும்.


latest tamil newsநிதியமைச்சர் என்ற முறையில் பொருளாதாரத்திற்காக நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். தொடர்ந்து அதை பற்றி பேசியும் வருகிறேன். பொருளாதாரம் தொடர்பான விவகாரங்களுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன் என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் ". இவ்வாறு நிர்மலா தனது டுவீட்டில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
20-செப்-201919:08:35 IST Report Abuse
krish அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுமையுடன், பொறுப்புடன் கிரண் மசும்தர் ஷா வுக்கு பதில் அளித்துள்ளார். இதில் கருத்து மோதல் ஒன்றும் இல்லை. கருத்து பரிமாற்றம் தான் நடந்துள்ளது. பொருளாதார மந்த நிலைமைக்கு பல காரணங்கள் உள்ளன. தீர்வு எளிமை, சுலபம் அல்ல. பொறுமை தேவை. வர்த்தக சுழற்சி (trade cycle) அப்பப்போது ஏற்படுவதுதான். சவாலே,சமாளி என்று அதை எதிர்கொண்டு வெற்றி பெற முயற்சிக்க வேண்டும். குற்றம், குறை சொல்லி யாதும் பயன் இல்லை.
Rate this:
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201911:15:39 IST Report Abuse
RM Kiran is an educated lady and an Indian citizen.If she ask something Nimala madam should give correct answer or just ignore it. But குழாயடிசண்டை ஏன்? That shows her inability.
Rate this:
Cancel
20-செப்-201907:52:25 IST Report Abuse
ஆப்பு பா.ஜ வில் யாரும் அவுங்க துறையை விட்டு விட்டு அடுத்த துறையைக் கவனிப்பாய்ங்க. எல்லோரும் ஆல் இன் ஆல் அழகுராசாக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X