காஷ்மீர் முடிவு, 130 கோடி மக்களின் உணர்வு: பிரதமர் மோடி உரை

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement

நாசிக்: மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.



latest tamil news


மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. 288 தொகுதிகளை உடைய இந்த சட்டமன்ற தேர்தலக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் பாஜ., கட்சி தனது பிரசாரத்தை தொடங்கியுள்ளது. 2014ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக., 122 இடங்களை கைப்பற்றி இருந்தது.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் 'மகாஜனதேஷ் யாத்திரை' என்னும் பெயரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். பிரசாரத்தில் மோடி கூறியது: கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அந்த நேரத்தில் டின்டோரியில் நடந்த பேரணியில் பங்கேற்றேன். உங்கள் ஆசிர்வாதங்களை தேடி பங்கேற்ற இந்த பேரணியில் பெரிய கூட்டத்தினர், பெரிய அதிர்வை ஏற்படுத்தினர். அந்த அதிர்வு, சக்தி வாய்ந்ததாக மாறி நாடு முழுவதும் பாஜக அலைவீச காரணமாக இருந்தது.


latest tamil news


மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், 2வது முறையாக முதல்வர் ஆவார். அவர், இளைஞர்களின் அடையாளமாக திகழ்கிறார். கடந்த 5 வருடத்தில் மகாராஷ்டிரா மாநிலம், அதிக வளர்ச்சியை பெற்றுள்ளது. விவசாயிகளுக்கு பல சலுகைகள் அளிக்கப்படுகிறது. முதல்வர், மாநிலத்தை வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்கிறார். இதற்காக அவரை பாராட்டுகிறேன்.

அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். கடந்த முறை இங்கு வந்தபோது வளர்ச்சியை அதிகப்படுத்துவேன் என கூறியிருந்தேன். அதை 100 நாட்களில் செய்து முடித்துள்ளேன். நாங்கள் அளித்த வாக்குறுதியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ஜம்மு-காஷ்மீர் விவகாரத்திலும் சொன்னபடி செயல்படுத்தினோம். காஷ்மீர் விவகாரத்தில் அரசு மட்டும் சேர்ந்து முடிவெடுக்கவில்லை. 130 கோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுத்தோம்.


latest tamil news


இந்த முடிவு இந்தியாவின் ஒற்றுமைக்கானது. மேலும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் கனவுகளையும் நிறைவேற்றும் முடிவாக இருக்கும். இந்தியாவின் பாதுகாப்பே எங்கள் முதன்மை நோக்கம். வன்முறை, தீவிரவாதத்தை தூண்டும் முயற்சிகள் நடந்து வந்தன. தற்போது, அங்குள்ள இளைஞர்கள், தாய்மார்கள், சகோதரிகள் வன்முறையில் இருந்து வெளிவந்து, புதிய முன்னேற்றத்திற்கான வேலை வாய்ப்புகளை எதிர்நோக்குகின்றனர். இவ்வாறு பிரதமர் உரையாற்றினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Asagh busagh - Munich,ஜெர்மனி
19-செப்-201919:41:00 IST Report Abuse
Asagh busagh ஓசிவாயனுங்களா மோடியை பிடிக்கலை சரி. ஆனா புதுசா ஒரு மாற்றத்துக்கு ஓட்ட போடாம 70 வருஷம் நாட்ட சுருட்டுன காங்கி களவாணிகளுக்கும், அவனுங்களுக்கிட்ட அடிவருடி கல்லா கட்டுன கழக பொறம்போக்குகளுக்கும் ஓட்ட குத்திபுட்டு எந்த தகுதியோட பிஜேபிக்கு எதிரா கும்மியடிக்கிறீங்க?
Rate this:
pazhaniappan - chennai,இந்தியா
19-செப்-201921:11:42 IST Report Abuse
pazhaniappanயாரோ ஒருவர் தனது அறிவுக்கு ஏற்றாற்போல் சில சொற்களை கையாண்டிருக்கிறார்...
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
19-செப்-201921:17:34 IST Report Abuse
chakraஜனநாயகம் அப்படினா என்ன தெரியுமா...
Rate this:
tamilvaandu - Sivakasi,இந்தியா
20-செப்-201901:33:31 IST Report Abuse
tamilvaandu@Chakra - காசு கொடுத்து வோட்டு வாங்குறது கழக ஜனநாயகம்...
Rate this:
chakra - plano,யூ.எஸ்.ஏ
20-செப்-201916:01:48 IST Report Abuse
chakraபதிவான ஓட்டுகள் பிஜேபிக்கு எதிரான ஓட்டுகள் . திருட்டு கழகங்களுக்கு ஆதரவானவை அல்ல அப்படியானால் பிஜேபி கழகங்களை விட மோசம் என்றுதானே அர்த்தம்...
Rate this:
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
19-செப்-201919:05:38 IST Report Abuse
Ramaraj P சென்செக்ஸ் மற்றும் பொருளாதாரம் இரண்டையும் பற்றிய அறிவு இருப்பவர்களால் ஆட்சி அமைக்கும் அளவுக்கு மெஜாரிட்டி இல்லை என்பதே உண்மை.
Rate this:
Cancel
Raj - Chennai,இந்தியா
19-செப்-201918:03:54 IST Report Abuse
Raj J&K வில் SC/ST க்கு இடஒதுக்கீடு முன்னர் கிடையாது தெரியுமா உங்களுக்கு? இப்போதுதான் அவர்களுக்கு இடஒதுக்கீடு கிட்டியுள்ளது அறிவீர்களா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X