விஐபி சிறையாகிறதா திகாரின் 7 ம் எண் அறை ?

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (38)
Advertisement

புதுடில்லி : முன்னாள் மத்திய அமைச்சரும் காங்., தலைவருமான ப.சிதம்பரத்தை தொடர்ந்து, அதே கட்சியை சேர்ந்த கர்நாடகா முன்னாள் அமைச்சர் சிவக்குமாரும் திகாரில் உள்ள 7 ம் எண் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.





பொதுவாக பொருளாதார குற்றம் புரிந்தவர்களே திகாரில் உள்ள சிறை எண் 7 ல் அடைக்கப்படுகிறார்கள். ஐஎன்எக்ஸ் மீடியாக வழக்கில் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட ப.சிதம்பரம் செப்., 5 ம் தேதி திகாரின் சிறை எண் 7 ல் அடைக்கப்பட்டார். 15 வது சிறை அறையில் சிதம்பரம் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு முந்தைய அறையில், பண மோசடி வழக்கில் சிக்கிய கர்நாடக மாஜி அமைச்சர் சிவக்குமார் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறை தண்டனை பெற்றதும் உடல் நலக்குறை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிவக்குமார், இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, திகார் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பக்கத்து பக்கத்து அறையில் இருந்தாலும் சிதம்பரம் மற்றும் சிவக்குமார் ஒருவருக்கு ஒருவர் சந்திக்கவோ, பேசிக்கொள்ளவோ வாய்ப்பே இல்லை என கூறப்படுகிறது.




இதற்கு முன் சிறை எண் 7 ல் காஷ்மீர் பிரிவினைவாத இயக்க தலைவர் யாசின் மாலிக், அகஸ்தா வெஸ்ட்லேண்ட் முறைகேடு விவகாரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட பிரிட்டன் தொழிலதிபர் கிறிஸ்டியன் மைக்கேல், தொழிலதிபர் தீபக் தல்வார் ஆகியோர் அடைக்கப்பட்டிருந்தனர். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ.,யால் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் சிறை எண் 7 லேயே அடைக்கப்பட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளாக சிறை எண் 7 ல் பொருளாதார விஐபி.,க்கள் அதுவும் காங்., கட்சியை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டு வருவதால் தற்போது சிறை எண் 7, விஐபி.,க்கள் சிறையாகவும், காங்.,ன் சிறையாகவும் மாறி வருவதாகவே பேசப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
20-செப்-201906:13:58 IST Report Abuse
kalyanasundaram IN INDIA NO. 9 IS REFERRED TO TRANSGENDER NOW NO 7 SHOULD BE REFERRED TO CORRUPT POLITICIANS.
Rate this:
Share this comment
Cancel
20-செப்-201904:51:15 IST Report Abuse
அருணா விஐபியா இன்னுமா? ஐந்து ரூபா அடிச்சாலும் தப்பு தான் கோடிக் கணக்கில் அடிச்சாலும் தப்புதான். அப்ப எல்லாருமே விஐபி தான்னு சொல்லுங்க ஏற்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
orange mittai - Melbourne ,ஆஸ்திரேலியா
20-செப்-201901:38:01 IST Report Abuse
orange mittai ஒரு வேளை காங்கிரஸ் திரும்ப வருமானால் அறை எண் 8 எதிர்கட்சிக்கு ஒதுக்கப்படும் என நம்புவோமாக...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X