சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கங்கைகொண்டான் பூங்கா அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019
Share
Advertisement
கங்கைகொண்டான், பூங்கா அருகே, நாய்கள், கடித்து, புள்ளிமான், பலி

திருநெல்வேலி:கங்கைகொண்டான் மான் பூங்கா அருகே நாய்கள் கடித்ததில் ஒரு புள்ளி மான் பலியானது.திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் அருகே நான்குவழிச்சாலையொட்டி 400 எக்டர் நிலத்தில் மான் பூங்கா அமைந்துள்ளது.
அங்கு 400க்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் உள்ளன. இருப்பினும் சுற்றுச்சுவர் வசதி போதுமான அளவில் இல்லாததாலும், அங்கு குடிநீர் தட்டுப்பாடு. உணவின்மை காரணமான மான்கள் எதிர்புறம் உள்ள சிப்காட் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகம் போன்ற இடங்களுக்கு சென்றுவிடுகின்றன.

நேற்று மாலையில் சிப்காட் வளாகத்திற்கு சென்ற புள்ளிமான் ஒன்றை நாய்கள் கடித்தன. இதில் மான் சம்பவ இடத்திலேயே இறந்தது.சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்து இறந்த மானை மீட்டுச்சென்றனர். கோடிக்கணக்கில் மத்திய, மாநில அரசுகள் நிதிஒதுக்கியும் மான்பூங்கா பராமரிப்பின்மையால் தினமும் மான்கள் பலியாவது தொடர்கிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X