பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : செப் 19, 2019
Advertisement
 இதே நாளில் அன்று

செப்டம்பர் 20, 1924 நாகேஸ்வர ராவ்:

ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், ராமாபுரம் என்ற ஊரில், அக்கினேனி வேங்கட ரத்தினம் -- புன்னம்மா தம்பதிக்கு மகனாக, 1924 செப்., 20ல் பிறந்தார். தொடக்கப்பள்ளி வரை படித்தார். பின், நாடகங்களில் நடித்தார். இவர் நடித்த, அரிச்சந்திரா, கனகதாரா, விப்ரநாராயணா, தெலுகு தல்லி, ஆசைஜோதி, சத்யான் வேஷணம் போன்றவை, பிரபலமாக பேசப்பட்டன. இவர், தர்ம பத்தினி என்ற படத்தின் வாயிலாக, சினிமாவில் அறிமுகமானார்.தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில், 256 படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். தேவதாஸ், லைலா மஜ்னு, அனார்கலி, பிரேமாபிஷேகம், பிரேம் நகர், மேக சந்தேசம் உள்ளிட்ட பல படங்கள் வெற்றிக்கரமாக ஓடின. மூன்று முறை தெலுங்கு மொழிக்கான, பிலிம்பேர் பத்திரிகையின், சிறந்த நடிகர் விருதை பெற்றவர்.பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண், தாதாசாகிப் பால்கே, என்.டி.ஆர்., தேசிய விருதுகளை பெற்றவர். தென்னிந்திய நடிகரும், தயாரிப்பாளருமான, நாகேஸ்வர ராவ், 2014 ஜன., 22ல் காலமானார்.அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X