காஷ்மீரில் புதிய சொர்க்கத்தை உருவாக்க பிரதமர் அழைப்பு!

Updated : செப் 20, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (34)
Share
Advertisement

நாசிக்: ''பல ஆண்டுகளாக, காஷ்மீர் மக்கள் அனுபவித்து வந்த வேதனைக்கு, காங்கிரஸ் தான் காரணம். இப்போது, காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரையும், நாம் அரவணைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. காஷ்மீரில் புதிய சொர்க்கத்தை உருவாக்க, அனைவரும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்,'' என, பிரதமர் மோடி பேசினார்.latest tamil news


மகாராஷ்டிர மாநில சட்டசபையின் பதவிக்காலம் நவம்பர் 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. அங்கு அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்படுகிறது. பாரதிய ஜனதா பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாங்கள் அளித்த வாக்குறுதியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறோம். ஜம்மு காஷ்மீர் விவகாரத்திலும் சொன்னபடி செயல்படுத்தினோம். 130 கோடி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து முடிவு எடுத்தோம் என பிரதமர் குறிப்பிட்டார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. மஹாராஷ்டிரா சட்டசபையின் பதவிக் காலம், நவம்பருடன் முடிவடைகிறது. இதையொட்டி, அடுத்த மாதம், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் தேதி அறிவிப்பு, இன்னும் வெளியாகாத நிலையில், அரசியல் கட்சிகள், பிரசாரத்துக்கு தயாராகி வருகின்றன. பா.ஜ., பிரசாரத்தை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்தார். நாசிக் நகரில் நடந்த பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:


latest tamil news

Prime Minister Narendra Modi in Nashik


விருப்பம்ஜம்மு - காஷ்மீர் மக்கள், இதுவரை வேதனையை அனுபவித்து வந்ததற்கு, நம் நாட்டை, 50 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ் தான் காரணம். ஜம்மு - காஷ்மீர் மக்களின் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்துவதாக, ஏற்கனவே உறுதி அளித்திருந்தோம். அதைத் தான், தற்போது செயல்படுத்தி வருகிறோம். காஷமீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை ரத்து செய்தது, நாட்டில் வசிக்கும், 130 கோடி மக்களின் விருப்பம். காஷ்மீர் மற்றும் லடாக் பகுதி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


latest tamil news

Prime Minister Narendra Modi in Nashik

பயங்கரவாதம், பிரிவினைவாதம், ஊழல் ஆகியவற்றிலிருந்து, காஷ்மீர் மக்களை மீட்பதற்காகவே, இதைச் செய்தோம். காஷ்மீரில் வன்முறையை ஏற்படுத்த, எல்லைக்கு அப்பால் இருந்து, பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜம்மு - காஷ்மீரில் வசிக்கும் சகோதரிகள், தாய்மார்கள், நீண்டகாலமாக நிகழ்ந்து வந்த வன்முறையிலிருந்து, வெளியே வரும் மனநிலையில் உள்ளனர். காஷ்மீரில் வளர்ச்சியையும், வேலை வாய்ப்பையும் உருவாக்க வேண்டும் என, அவர்கள் நினைக்கின்றனர்.


latest tamil news

Prime Minister Narendra Modi in Nashik

தற்போது காஷ்மீரில் மேற்கொள்ளபட்டுள்ள நடவடிக்கை காரணமாக,அங்கு,புதிய சொர்க்கத்தை உருவாக்குவோம். இதற்காக, காஷ்மீர் மக்கள் ஒவ்வொருவரையும், நாம் அரவணைக்க வேண்டும். இதற்காக, நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பா.ஜ., அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையையும், அரசியலாக்குகின்றனர். 'ஓட்டு வங்கி அரசியல்' என, விமர்சிக்கின்றனர். கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தையும் விமர்சிக்கின்றனர். கால்நடைகளுக்கு ஓட்டு இல்லை என்பதை, எங்களை விமர்சிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.


latest tamil news

பவார் மீது விமர்சனம்காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு, நாடு முழுவதும் உள்ள மக்கள், ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில், ஒட்டு மொத்த நாட்டு மக்களும், ஒரே மனநிலையில் செயல்பட்டபோது, காங்கிரசும், தேசியவாத காங்கிரசும், வேறு மாதிரியான கருத்துகளை தெரிவித்தன. அண்டை நாடான, பாகிஸ்தானுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்தனர்.

இந்த விஷயத்தில், காங்கிரசின் நடவடிக்கைகளை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நாட்டில் உள்ள மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான, சரத் பவாரும், பாகிஸ்தானுக்கு சாதகமாக கருத்து தெரிவித்ததை தான் புரிந்து கொள்ள முடியவில்லை. ஓட்டு வங்கி அரசியலுக்காக, மூத்த தலைவர், இதுபோல் செயல்படக் கூடாது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், நிலையான ஆட்சியை கொடுத்து வருகிறார். இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பது தான், மஹாராஷ்டிரா மக்களின் விருப்பம்.

முந்தைய, காங்கிரஸ் அரசு, தேசிய பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில், மிகவும் அலட்சிய மாக செயல்பட்டது. ராணுவ வீரர்களுக்கு, குண்டு துளைக்காத உடைகள் வேண்டும் என கேட்டபோது, அதை பொருட்படுத்தவில்லை. பா.ஜ., ஆட்சிக்கு வந்ததும், தேசிய பாதுகாப்பு விஷயத்தில் முழு கவனம் செலுத்தப்பட்டது. ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடைகள் தயாரித்து வழங்கப்பட்டன. மேலும், 100 நாடுகளுக்கு, இந்த உடைகளை நாம் ஏற்றுமதி செய்து வருகிறோம். இவ்வாறு, அவர் பேசினார்.


சிவசேனா மீது பாய்ச்சல்உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவது தொடர்பான வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், பா.ஜ.,வின் கூட்டணி கட்சியான, சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே, 'காஷ்மீரில் எடுக்கப்பட்டது போல், ராமர் கோவில் விவகாரத்திலும், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அயோத்தியில், ராமர் கோவில் கட்டப்பட வேண்டும். இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காத்திருப்பது' என, தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், நாசிக்கில் நேற்று நடந்த கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது:ராமர் கோவில் விவகாரத்தில், சிலர், தேவையில்லாமல், சர்ச்சைக்குரிய கருத்து களை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு, தற்போது, உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், உச்ச நீதிமன்றத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். இதை, அனைவருக்கும், பணிவுடன், கோரிக்கையாகவே வைக்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
21-செப்-201901:48:12 IST Report Abuse
Vetri Vel எல்லாரையும் சொர்க்கத்துக்கு அனுப்பிடலாம்னு சூசகமா சொல்றனோ ஒரு தறுதலை..
Rate this:
Share this comment
Cancel
ராஜவேலு ஏழுமலை - Gummidipoondi,இந்தியா
20-செப்-201920:28:40 IST Report Abuse
ராஜவேலு ஏழுமலை போகவேண்டிய ஆளுங்க நரகத்துக்கு போய்ட்டா, மிச்சமிருக்கிற ஆளுங்களுக்கு இந்த பூமியே சொர்க்கமாயிடும்.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
21-செப்-201909:53:20 IST Report Abuse
Chowkidar NandaIndiaகரெக்ட். இத்தாலி குடும்பத்திலிருந்து ஆரம்பிப்போமா?...
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
20-செப்-201917:34:45 IST Report Abuse
Poongavoor Raghupathy Kashmir is going to be a heaven. But other parts of India should not become a hell. Modi says promises are getting fulfilled but unemployment problem is looming large and even employees in Auto sector are loosing their jobs. Nirmala is merging Banks and Banks are going to strike work.Are we heading for a heaven or going to a hell.Can we turn around for good days in life.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X