வரலாறு சுருங்கிவிடக் கூடாது!
இந்த நாட்டின் வளர்ச்சியில், காந்தி மற்றும் நேருவின் பங்கை மறுப்பதற்கில்லை. ஆனால், நம் அரசியல் வரலாறு, இரண்டு குடும்பங்களோடு சுருங்கிவிடக் கூடாது. நேரு, 14 நிமிடங்கள் சிறையில் இருந்திருந்தால் கூட, அவரை வீரர் என அழைத்திருப்பேன். ஆனால், சாவர்க்கர், 14 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அவருக்கு, பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.உத்தவ் தாக்கரேதலைவர், சிவசேனா
எதிர்வினை தேவையில்லை!
காவி உடை அணிபவர்கள் பற்றி, காங்கிரஸ் தலைவரான, திக்விஜய் சிங் கூறும் கருத்துகளுக்கு, நாம் ஏன் எதிர்வினையாற்ற வேண்டும்? அவரது கருத்துகளுக்கு, காங்., கட்சியைச் சேர்ந்தவர்களே முக்கியத்துவம் தருவதில்லை. நாங்கள் ஏன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்? மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, அவர் சொன்ன கருத்துகளில் இருந்தே, அவர், எப்படிப்பட்டவர் என்பதை அனைவரும் உணர்ந்தனர். பிரகாஷ் ஜாவடேகர்மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர், பா.ஜ.,
தீர்ப்பை ஏற்க வேண்டும்!
அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அது, சிலருக்கு ஏற்புடையதாக இருக்கும்; சிலருக்கு ஏற்க முடியாததாக இருக்கும். ஆனால், இறுதியில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை, அனைவரும் ஏற்றுத் தான் ஆக வேண்டும். அயோத்தியில், நாங்கள் கோவில் கட்ட வேண்டிய அவசியமில்லை. தீர்ப்பின் அடிப்படையில், அறக்கட்டளை அதை செய்யும். பிரச்னை உருவானால், நீதிமன்றத்தை நாடுவோம். அமித் ஷாமத்திய உள்துறை அமைச்சர், பா.ஜ.,
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE