பொது செய்தி

இந்தியா

தேஜஸ் விமானத்தில் பறந்தார் ராஜ்நாத்

Updated : செப் 21, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
தேஜஸ், விமானம், ராஜ்நாத்

பெங்களூரு: ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, தேஜஸ் போர் விமானத்தில் நேற்று பயணித்தார்.

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான, எச்.ஏ.எல்., எனப்படும், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிட்., தேஜஸ் என பெயரிடப்பட்டுள்ள, இலகு ரக போர் விமானத்தை, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்திய விமானப் படை, ஏற்கனவே, 40 தேஜஸ் விமானங்களை வாங்க, எச்.ஏ.எல்.,லிடம், 'ஆர்டர்' கொடுத்துள்ளது.இந்நிலையில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், மேலும், 83 விமானங்களை வாங்குவதற்கான, ஆர்டர் தற்போது கொடுக்கப்பட்டுள்ளது. அதி நவீன வசதியுடைய இந்த விமானத்தில் பயணிப்பதற்காக, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், நேற்று கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள, எச்.ஏ.எல்., விமான நிலையத்துக்கு வந்தார்.

பின், போர் விமானி போன்ற உடை, கண்ணாடி, ஹெல்மெட் ஆகியவற்றை அணிந்த அவர், விமானத்தின் பைலட் மற்றும் விமானப் படை துணை தளபதி, திவாரி ஆகியோருடன், தேஜஸ் விமானத்தில் பறந்தார். இந்த பயணம், 30 நிமிடங்கள் நீடித்தது. விமானம் தரையிறங்கியதும், அதில் பயணித்த அனுபவத்தை, ராஜ்நாத் சிங், செய்தியாளர்களிடம் பகிர்ந்த கொண்டார்.

அவர் கூறியதாவது: இந்த விமானத்தில் பறந்தது, மிகவும் மகிழ்ச்சியாகவும், 'திரிலிங்'காகவும் இருந்தது; இது, நல்ல அனுபவமாக இருந்தது.இந்த நவீன விமானத்தை தயாரித்த, எச்.ஏ.எல்., மற்றும் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு கழக அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். போர் விமானங்களை மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்த நிலை மாறி, தற்போது, மற்ற நாடுகளுக்கு, போர் விமானங்களை, நாம் ஏற்றுமதி செய்யும் நிலையை எட்டியுள்ளோம். கிழக்காசிய நாடுகள்,தேஜஸ் விமானங்களை வாங்க, ஆர்வம் காட்டுகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.

விமானப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'விமானத்தில், பைலட்டின் இருக்கைக்கு பின் அமர்ந்திருந்த அமைச்சர், முன் இருக்கைக்கு சென்று, இரண்டு நிமிடங்கள் மட்டும், விமானத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்' என்றார்.

தேஜஸ் விமானத்தில் பறந்த, முதல் ராணுவ அமைச்சர் என்ற பெருமை, ராஜ்நாத் சிங்கிற்கு கிடைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-201909:57:13 IST Report Abuse
பச்சையப்பன் விமானத்தில் பறந்து வானத்தில் பறக்கும் விலைவாசியை பிடிக்கப் பார்க்கிறார்.
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
20-செப்-201918:05:09 IST Report Abuse
Nathanஓ, அந்த அளவு வாங்கித் தின்ன முடியாதபடி விலைவாசி ஏறிடுச்சா? உப்பா சமயத்திலெல்லாம் வேற நாட்டில் உலவினீகளா ? இப்போ கடைக்குப் பொய் வாங்கி பழக்கம் உண்டா, அல்லது 200 ரூபாய் & இநாம்சு கேசா ?...
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-செப்-201907:20:03 IST Report Abuse
Natarajan Ramanathan I congratulate our honourable defence minister Shri Rajnath Singh. At the same time, I also remember the video of the then congress defence minister being carried away by two army officers in their arms during Mannumohan period.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
20-செப்-201903:41:58 IST Report Abuse
blocked user வாவ்.. HAL தயாரித்த ஒரு விமானத்தில் எற நல்ல தைரியம் வேண்டும்... சூப்பர்...
Rate this:
Share this comment
Nathan - Hyderabad,இந்தியா
20-செப்-201906:33:54 IST Report Abuse
Nathanஇந்த தாழ் எண்ணமே இத்தாலிய அடிவருடி கும்பலால் பரப்பப் பட்ட திட்டமிட்ட குற்ற மனப்பான்மை மூளை சலவை. அந்த எழவு நீங்கி இப்போது இந்தியா தலை நிமிர்கிறது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X