அமித் ஷாவுடன் மம்தா சந்திப்பு| Dinamalar

அமித் ஷாவுடன் மம்தா சந்திப்பு

Added : செப் 19, 2019
Share
புதுடில்லி, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷாவை, டில்லியில் நேற்று சந்தித்தார்.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, பா.ஜ., மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து, கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தார். டில்லியில் நடந்த, முதல்வர்கள் மாநாடு உட்பட பல நிகழ்ச்சிகளை அவர்
 அமித் ஷாவுடன் மம்தா சந்திப்பு

புதுடில்லி, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷாவை, டில்லியில் நேற்று சந்தித்தார்.மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜி, பா.ஜ., மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடர்ந்து, கடும் விமர்சனங்களை முன் வைத்து வந்தார். டில்லியில் நடந்த, முதல்வர்கள் மாநாடு உட்பட பல நிகழ்ச்சிகளை அவர் புறக்கணித்தார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க, அவர் நேரம் கேட்டிருந்தார். அதன்படி, டில்லியில், பிரதமர் மோடியை, நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது, மாநிலத்தின்பெயரை மாற்றுவது உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, அவர் விவாதித்தார்.இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., தலைவருமான, அமித் ஷாவை, நேற்று சந்தித்து பேசினார். ''அசாமில் நடந்த தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பில், 19 லட்சம் பேர்விடுபட்டனர். வங்க மொழி பேசுவோர் உட்பட தகுதியுள்ளவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்,'' என, மம்தா பானர்ஜி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X