சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை வங்கிக்குள் கொலை முயற்சி இருவர் கைது; மூன்று பேர் மீது வழக்கு

Added : செப் 19, 2019
Advertisement
மானாமதுரை வங்கிக்குள் கொலை முயற்சி  இருவர் கைது; மூன்று பேர் மீது வழக்கு

மானாமதுரை, சிவகங்கை மாவட்டம்மானாமதுரையில் கொலை வழக்கில் ஜாமினில்வந்தவர், நேற்று முன்தினம் தன்னை கொலை செய்ய தாக்கியவர்களிடமிருந்து தப்பிக்க வங்கிக்குள் நுழைந்தார்.விரட்டி சென்று வெட்ட முயன்றவர்களை காவலாளி சுட்டதில் ஒருவர் காயமடைந்தார். இருவர் கைது செய்யப்பட்டனர். மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மானாமதுரையில் கடந்த மே 26ல் ஆவரங்காட்டைச் சேர்ந்த அ.ம.மு.க., ஒன்றியச் செயலாளர் சரவணன் நடைபயிற்சிக்கு சென்ற போது வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆவரங்காடு தங்கராசு, அவரது அண்ணன் தங்கமணி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.தங்கமணி ஜாமினில் வெளியே வந்தார். அவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில்மானாமதுரை மரக்கடை ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்தபோது, 2 இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து வந்த 4 பேர் மறித்து வெட்டினர். தங்கமணி வெட்டுக்காயங்களோடு கனரா வங்கிக்குள் ஓடினார்.பின் தொடர்ந்த கும்பல் வங்கிக்குள்ளும் அவரை தாக்கியது. காவலாளி செல்லநேரு துப்பாக்கியால் கும்பலை நோக்கிச் சுட்டதில் பிச்சப்பனேந்தல் தமிழ்செல்வன் 32, முழங்காலுக்கு கீழே குண்டு பாய்ந்தது. இதனை பார்த்த மற்றவர்கள் தப்பித்து ஓடினர்.இச்சம்பவம் குறித்து தங்கமணி கொடுத்த புகாரின் பேரில் தங்கராஜ், தமிழ்செல்வன் கைது செய்யப்பட்டனர்.மச்சக்காளை உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.உறவினர் பூமிநாதன் உட்பட 2 பேரை பிடித்து மானாமதுரை போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று மானாமதுரை போலீஸ் டி.எஸ்.பி.,கார்த்திகேயன் தெரிவித்தார்.பாராட்டுகாவலாளி செல்லநேருவின் துணிச்சலான செயலை பாராட்டி, ராமநாதபுரம் டி.ஐ.ஜி., ரூபேஸ்குமார் மீனா, சிவகங்கை எஸ்.பி., ரோஹித்நாதன் சான்றிதழ்வழங்கினர். வங்கியிலிருந்த வாடிக்கையாளர்களும் அவரை பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X