சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடை பணியாளர்கள் ஆறுகட்ட போராட்டம்

Added : செப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

மதுரை, ஓய்வூதியம் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆறு கட்ட போராட்டத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.மாநிலத்தில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் நடத்தும் ரேஷன் கடைகளில் 38 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்கள் ஓய்வூதியம், செயலாளர் பணியிட மாற்ற உத்தரவை திரும்ப பெறுவது உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் அரசு நடவடிக்கை எடுக்காததால் செப்., 16 முதல் ஒத்துழையாமை இயக்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.மதுரையில் சங்க தென் மண்டல அமைப்பாளர் ஆசிரியத்தேவன் கூறியதாவது: 15 ஆண்டுகளாக பணிபுரிவோரை பணி வரன்முறை செய்யவில்லை. மேலும் பத்தாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. சிறப்பாக செயல்படும் சங்க செயலாளர்களை வேறு சங்கங்களுக்கு மாற்றுவதால் தேவையில்லாத குழப்பம் ஏற்படுகிறது. சிறப்பாக செயல்பட்ட சங்கங்கள் நலிவுறும். செயலாளர்களை பணிமாற்றும் உத்தரவை திரும்ப பெற அரசு முன்வரவில்லை. இதனால் செப்., 22 வரை ஒத்துழையாமை இயக்கம், 23 முதல் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிவது, 30 ல் சேலத்தில் குடும்பத்தினருடன் உண்ணாவிரதம், அக்., 14 மதுரையில் பேரணி, 21 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம், அக்., 25 மறியல் போராட்டம் நடத்தப்படும். அரசு உடனடியாக பணியாளர்களை அழைத்து பேச வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
20-செப்-201909:13:10 IST Report Abuse
Ramachandran Rajagopal இந்த கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் மற்றும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் ஆகியோர் ரேஷன் கடை பணியாளர்களை அடிமைகளாகக் கருதிக் கொண்டு 1993ல் ரேஷன் கடை பணியாளர்களையும் மற்ற பணியாளர்களுடன் சேர்த்து அரசு நிர்ணயித்த ஊதிய விகிதங்களை அமல்படுத்த போராடவில்லை.அவர்களின் எண்ணிக்கையைக் காட்டி இவர்கள் உரிமைகளைப் பெற்றுக் கொண்டனர்.மீண்டும் அத்தகைய மோசடிக்கு ரேஷன் கடை பணியாளர்கள் ஆளாகின்றனர்.ஆடு கசாப்புக்கு கடைக்காரனைத்தான் நம்புகிறது என்பது இவர்களுக்கும் பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X