போலீஸ்காரரை மஜாவிற்கு அழைத்த நால்வர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ்காரரை 'மஜா'விற்கு அழைத்த நால்வர் கைது

Added : செப் 19, 2019 | கருத்துகள் (1)

மதுரை,:மதுரையில் ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ்காரரின் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பி 'மஜா'விற்கு அழைத்த கர்நாடக பெண் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டனர்.மதுரையில் பியூட்டி பார்லர், மசாஜ், ஸ்பா சென்டர் என்ற பெயரில் விபச்சாரத்தில் வெளி மாநிலத்தை சேர்ந்த சிலர் ஈடுபட்டு வருவது அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ்காரர் திருப்பதி அலைபேசிக்கு நேற்று காலை குறுந்தகவல் வந்தது.அதில் விளாங்குடி அசோக்நகரில் கர்நாடகாவை சேர்ந்த இளம் பெண்ணிடம் பாலியல் உறவு கொள்ள, ஒரு இரவுக்கு ரூ.12 ஆயிரம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து தனிப்படை போலீசாருக்கு திருப்பதி தகவல் கொடுத்து விட்டு குறுந்தகவல் வந்த அலைபேசிக்கு 'ஓகே' என தகவல் அனுப்பினார்.திருப்பதி அலைபேசிக்கு தொடர்பு கொண்ட மனோஜ்குமார் என்பவர் அவரை அசோக்நகர் அழைத்து சென்றார். அவரிடம் ரூ.12 ஆயிரம் பெற்று கொண்டு அங்கிருந்த கர்நாடகாவை சேர்ந்த நந்தினியையும், திருப்பதியையும் அறைக்குள் அனுப்பினர். அப்போது மனோஜ்குமார், நந்தினி, திண்டுக்கல்லை சேர்ந்த அய்யனார், சேகர் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். ரொக்கம், அலைபேசிகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X