சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் மாணவர், டாக்டர் தந்தை தலைமறைவு

Added : செப் 19, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
தேனி, 'நீட்' தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த மாணவர் உதித்சூர்யா 20, மற்றும் அவரது தந்தையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டருமான வெங்கடேசனை 49, கைது செய்ய போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இருவரும் தலைமறைவாகி விட்டனர்.சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த உதித்சூர்யா 'நீட்' தேர்வில் 385 மதிப்பெண் பெற்று
'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம் மாணவர், டாக்டர் தந்தை தலைமறைவு

தேனி, 'நீட்' தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., சேர்ந்த மாணவர் உதித்சூர்யா 20, மற்றும் அவரது தந்தையும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டாக்டருமான வெங்கடேசனை 49, கைது செய்ய போலீசார் சென்னையில் முகாமிட்டுள்ளனர். இருவரும் தலைமறைவாகி விட்டனர்.சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த உதித்சூர்யா 'நீட்' தேர்வில் 385 மதிப்பெண் பெற்று மாநில ஒதுக்கீட்டில் தேனி அரசு மருத்துவக்கல்லுாரியில் சில மாதங்களுக்கு முன் எம்.பி.பி.எஸ்., சேர்ந்தார். இந்நிலையில் கல்லுாரி முதல்வர் ராஜேந்திரனுக்கு சென்னை மருத்துவ மாணவர் அசோக்கிருஷ்ணன் என்பவர் செப். 11ல் அனுப்பிய மின்னஞ்சலில், 'உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து கல்லுாரியில் சேர்ந்துள்ளார்' என குறிப்பிட்டு, மகாராஷ்டிரா மாநிலத்தில் அவர் 'நீட் 'தேர்வு எழுதிய ஹால் டிக்கெட்டை அனுப்பினார்.நடவடிக்கை இல்லாததால் மீண்டும் செப்.,13ல் புகார் அனுப்பினார் இதையடுத்து துணை முதல்வர் இளங்கோ, பேராசிரியர்கள் ஜெயந்தி, ரெத்திகா, விஜயலட்சுமி கொண்ட குழு அமைத்து விசாரிக்க முதல்வர் உத்தரவிட்டார்.

தலைமறைவு
விசாரணையில் ஆள்மாறாட்டம் உறுதி செய்யப்பட்டது. இதனால் உதித்சூர்யா, 'மன உளைச்சல் காரணமாக படிப்பை தொடர இயலாது, என முதல்வருக்கு கடிதம் அனுப்பிவிட்டு தலைமறைவானார். இதையடுத்து முதல்வர் அளித்த புகாரின்படி உதித்சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய நபர் மீது போலீசார் வழக்குப்பதிந்தனர். இன்ஸ்பெக்டர் உஷா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் சென்னையில் நடத்தும் மருத்துவமனை, அவரது வீட்டிற்கு போலீசார் சென்றனர். ஆனால் மகன், தந்தை தலைமறைவாகிவிட்டனர். அலைபேசி எண் சிக்னல் மூலம் அவர்களை தேடும் பணி நடக்கிறது. அவர்கள் சிக்கினால் தான் தேர்வு எழுதிய நபர் உட்பட முழு விபரமும் தெரியும்.டி.எஸ்.பி., சீனிவாசன் கூறுகையில், ''புகார் கொடுத்துள்ள அசோக் கிருஷ்ணன், மாணவர் உதித் சூர்யா, துணையாக இருந்தவர்கள் குறித்த தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறது' என்றார்.சென்னை சென்ற குழுவினர் மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு, தேர்வுக்குழு செயலர் செல்வராஜன் முன்னிலையில் விசாரணையில் பங்கேற்பதற்காக தேனி மருத்துவக்கல்லுாரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள் சென்னை சென்றனர்.
விசாரணைக்கு ஒத்துழைக்கவும், 'நீட்' தேர்வின் போது நடந்த வீடியோ பதிவுகளை வழங்கவும் மகாராஷ்டிரா மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
தாமதம் ஏன்
தேனி மருத்துவக்கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது:ஆள்மாறாட்டம் தொடர்பாக போலீசில் உடனடியாக புகார் அளிக்காமல் காலம் தாழ்த்தியது ஏன் என புரியவில்லை. செப்.,18 ல் புகார் அளித்துவிட்டு செப்., 13ல் புகார் அளித்ததாக பதிவு செய்யுமாறு போலீசாரிடம் சிலர் வலியுறுத்தி உள்ளனர். அது எதற்காக என புரியவில்லை. செப்., 18ல் புகார் அளித்ததாக எஸ்.ஐ., அசோக் வழக்குப்பதிந்துள்ளார். புகாரில் ஆவணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என சர்ச்சை கிளம்பி உள்ள நிலையில் மருத்துவக்கல்வி இயக்குனர் நேரடி விசாரணை செய்ய வேண்டும், என்றனர்.அதிகாரிகளுக்கு தொடர்பு

இந்த சம்பவத்தில் மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் உதவியின்றி மாணவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. புகைப்படம் ஒன்றாக இருந்தாலும் மதிப்பெண் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய அதிகாரிகள் தவறி விட்டனரா அல்லது முறைகேட்டில் ஈடுபட உதவினரா என்ற கேள்வி எழுந்துள்ளது.மாணவர்களின் ஆவணங்கள் ஆய்வு
இதுகுறித்து மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு கூறியதாவது:உதித் சூர்யா விவகாரத்தில் 'நீட்' தேர்வு ஹால் டிக்கெட், கவுன்சிலிங் கடிதம், கல்லுாரி சேர்க்கை அனுமதி கடிதம் ஆகியவற்றில் ஒரே விதமான புகைப்படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது. சேர்க்கை ஆணைக்கு பின் கல்லுாரியில் சேர 20 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அப்போதுதான் உதித் சூர்யாவின் புகைப்படம் மாற்றப்பட்டு கல்லுாரியில் சேர்ந்திருக்க வாய்ப்பு உள்ளது.இதை தொடர்ந்து இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., - - பி.டி.எஸ்., சேர்ந்த மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்க கல்லுாரி முதல்வர்களுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் கைரேகை பதிவை அடிப்படை ஆவணமாக வைத்து மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kunjumani - சொரியார் பிறந்தமன் ,இந்தியா
21-செப்-201916:18:57 IST Report Abuse
Kunjumani தமிழன்டா, சொரியார் மண்ணல்லவா, சுடலை பாணியில் பிட் அடித்தாவது பாஸ் செய்வோம்
Rate this:
Cancel
VELAN S - Chennai,இந்தியா
21-செப்-201912:36:07 IST Report Abuse
VELAN S என்ன செஞ்சாலும் திருட்டு பயலுக திருடிக்கொண்டே தான் இருப்பான் , எம்.ஜி.ஆர் படத்தில் பாடின மாதிரி திருடராய் பார்த்து திருந்தினாலொழிய திருட்டை ஒழிக்க முடியாது என்பதுதான் உண்மை . அப்புறம் இந்த நியூஸ் இப்போதைக்கு என்ன என்ன ஆச்சு என்ற ஆவல் இருக்கும் , அப்புறம் இதை விட சூடான நியூஸ் வந்தவுடன் இந்த செய்தி என்ன ஆச்சு என்று யாரும் கவலை பட போவதில்லை , அந்த சமயத்தில் கண்ணும் கண்ணும் வைத்து திருட்டு பயலுக காரியத்தை சாதிச்சு விடுறானுக , முதல்ல , இந்திய தண்டனை சட்டம் திருந்தி பிடிக்க வேண்டியவனுக்களை உடனே பிடித்து உள்ளே போடணும் ,ஆமா .
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-செப்-201911:38:55 IST Report Abuse
மலரின் மகள் ஏற்கனவே முதுநிலை மருத்துவ நுழைவு தேர்வில் சென்னையில் நடந்த அனைத்து குளறுபடிகளிலும் மாட்டி கொண்டவர்கள் தப்புவிக்கப்பட்டனரா? அந்த தேர்வையே ரத்து செய்து புதிதாக தேர்வு நடந்த்து. ரத்து செய்யப்பட்ட தேர்வில் அதிக மதிப்பெண் பெட்ரா பலரும் மீண்டும் நடந்த தேர்வில் கலந்து கொள்ளாமலும் அரசு கல்லூரிகளில் சேராமல் தனியார் பல்கலையில் சேர்ந்து மருத்துவ பட்ட மேற்படிப்பில் சேர்ந்து விட்டார்கள் என என்றோ படித்ததாக ஞாபகம் வருவதாக தெரிகிறதே? உண்மையா அல்லது ஞாபகங்கள் அல்ல அவை வெறும் கனவுகளே என்றாவது வருவது போன்றவைகளா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X