சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சமாதான பேச்சுவார்த்தையால் பணி நிறுத்தம்

Added : செப் 19, 2019
Advertisement
 சமாதான பேச்சுவார்த்தையால் பணி நிறுத்தம்

புதுச்சத்திரம்:அரசு அதிகாரிகள் பொதுமக்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையால், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நிறுத்தப்பட்டது.
சிதம்பரம் அடுத்த கொத்தட்டை ஊராட்சியில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மனைப்பட்டா வழங்கியதாகவும், அதனை அதே பகுதியைச் சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த சிலருக்கு, இலவச மனைப்பட்டா பெற்றவர்கள் விற்றதாகவும் தெரிகிறது. அதில் மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர்.இந்நிலையில், இலவச மனைப்பட்டாவை ஆக்கிரமித்து குடியிருப்புகள் கட்டியுள்ளதாக, ஆதிதிராவிடர்கள் சார்பில் அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. அதனையொட்டி ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறை அதிகாரிகள் முயன்றபோது, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆக்கிரமிப்பை அகற்ற கூடாதென தகராறு செய்தனர்.பின்னர் மாவட்ட ஆதிதிராவிடர் துணை ஆட்சியர் ராஜஸ்ரீ, சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் (பொறுப்பு) பலராமன், புவனகிரி தாசில்தார் சத்யன், சிதம்பரம் டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர்கள் அமுதா, முருகேசன், பரங்கிப்பேட்டை பி.டி.ஓ., சதீஷ், வருவாய் ஆய்வாளர் இளவரசி, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் நாகராஜன், பா.ம.க., மாவட்ட செயலர் முருகன், மாநில இளைஞரணி செல்வமகேஷ் முன்னிலையில், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இன்னும் இரண்டு மாதங்களில், குடியிருப்பவர்கள் மாற்று இடங்களுக்கு செல்ல வேண்டும். ஆக்கிரமிப்பு பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு, அரசு சார்பில் இலவச மனைப்பட்டா வழங்கி, வீடு கட்ட ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையொட்டி பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X