சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Added : செப் 19, 2019
Advertisement
 கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கடலுார்:தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி, கடலுார் பெரியார் அரசு கல்லுாரி மாணவர்கள் 3வது நாளாக வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளுவர் பல்கலை கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் கடலுார் பெரியார் அரசு கல்லுாரி மாணவர்கள் கடந்த 17 ம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தேர்வு கட்டணத்தை ரத்து செய்யக் கோரி நேற்று மூன்றாவது நாளாக கல்லுாரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.விருத்தாசலம்திருவள்ளுவர் பல்கலைக்கழக தேர்வு கட்டணம் உயர்வை கண்டித்து, விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கல்லுாரிகளுக்கு தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதைக்கண்டித்து, விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பர் கல்லுாரி மாணவர்கள், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர், நேற்று வகுப்புகளை புறக்கணித்து, கல்லுாரி வாயிலில் அமர்ந்து போராட்டம் செய்தனர். கிராமப்புற மாணவர்கள் கல்வியை பாதிக்கும் கல்விக்கட்டண உயர்வை ரத்து செய்ய கோஷங்கள் எழுப்பினர். பின்னர், அனைவரும் கலைந்து சென்றனர்.கிள்ளை சி.முட்லுார் அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மாணவ, மாணவிகள் வகுப்புகளை புறக்கணிப்பு செய்து, கல்லுாரி வளாகத்தில், காலை 10; 00 மணி முதல், மதியம் 12;00 வரை போராட்டம் நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X