சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'உங்க ஊர் திருவிழா பாதுகாப்புக்கு வந்த பீஸ் ரூ.2 லட்சம் கட்டுங்க' எஸ்.பி., நோட்டீசால் அதிர்ச்சி

Added : செப் 19, 2019
Advertisement

சிவகங்கை, கிராம கோயில் விழா பாதுகாப்பிற்கு போலீஸ் வந்த கட்டணமாக ரூ.1.50 முதல் 2 லட்சம் வரை கட்டுமாறு எஸ்.பி., அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால் விழாக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.கிராமங்களில் திருவிழாவிற்கு வீடுகளில் தலைக்கட்டு வரி வசூலித்து செலவு செய்யப்படும். உண்டியல் பணமும் குறைவாகவே வசூலாகும்.திருவிழாவின்போது பாதுகாப்பு கோரி விழா கமிட்டியினர் உள்ளூர் போலீசில் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.ஐ., தலைமையில் அதிக பட்சம் 5 போலீசாரை பாதுகாப்பிற்கு அனுப்புவர். இதற்கு இதுவரை கட்டணம் வசூலிக்கப்பட்டது கிடையாது.6 மாதத்திற்கு பின் நோட்டீஸ்இந்நிலையில் கடந்த மார்ச்சில் நடத்தப்பட்ட பல திருவிழாக்களுக்கு போலீஸ் பாதுகாப்புக்கு வந்ததற்கு கட்டணம் செலுத்துமாறு எஸ்.பி., அலுவலகத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பி வருகின்றனர்.
ஒக்கூர் சோழபுரத்தில் எஸ்.ஐ., உட்பட 5 பேர் மட்டுமே வந்த ஒரு திருவிழாவிற்கு, இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 எஸ்.ஐ., 50 போலீசார் வந்ததாகவும், இன்ஸ்பெக்டருக்கு ரூ.5,456, எஸ்.ஐ.,க்கு ரூ.4,449, போலீசுக்கு தலா ரூ.2,402 என நிர்ணயித்து ரூ.1.47 லட்சத்தை கருவூலத்தில் கட்டுமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள் ஆயிரம் பேருக்குள் தான்.விழா கமிட்டி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: விழா பாதுகாப்பிற்கு ஸ்டேஷனில் மனு செய்த போதே, இது போன்று கட்டணம் வசூலிக்கப்படும் என கூறியிருக்க வேண்டும். 5 போலீசுக்கு மேல் வராத திருவிழாவிற்கு ரூ.1.47 லட்சம் கட்டணம் செலுத்த நோட்டீஸ் வந்துள்ளது. எஸ்.பி., அலுவலகத்தில் கேட்டபோது தவறாக வந்துவிட்டது என கூறினார்களே தவிர, கட்டணத்தை செலுத்த வேண்டாம் என எழுத்து பூர்வமாக தரவில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X