சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீசாரை கண்டித்து சாலை மறியல்

Added : செப் 19, 2019
Advertisement

மங்கலம்பேட்டை:மங்கலம்பேட்டை அருகே, போலீசாரை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

மங்கலம்பேட்டை அடுத்த பூண்டியாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு மகள், வித்தியா, 21. இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார். இந்நிலையில், நேற்று, சென்னையில் இருந்து வீட்டிற்கு வந்துள்ளார். உளுந்துார்பேட்டை அருகே வந்தபோது அவரை காணவில்லை.இது குறித்து, அவரது தந்தை சேட்டு ஆலடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்றார். ஆனால், உளுந்துார்பேட்டை எல்லை பகுதியில் காணாமல் போனதால், ஆலடி போலீசார் புகாரை வாங்க மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த வித்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாரை கண்டித்து, காலை 11:30 மணியளவில் விருத்தாசலம் - பாலக்கொல்லை சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.அங்கு போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர், ஆலடி போலீஸ் ஸ்டேஷன், ஏட்டு பாண்டியனை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தகவலறிந்து வந்த ஏ.எஸ்.பி., தீபாசத்யன் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் காணாமல் போன, பெண்ணை கண்டுபிடித்து தருவதாக உறுதியளித்ததன் பேரில், பகல் 12:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X