வாத்ரா நிலத்திற்கான உரிமம் ரத்து செய்தது அரசு

Updated : செப் 21, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (18)
Advertisement
வாத்ரா நிலத்திற்கான உரிமம் ரத்து செய்தது அரசு

சண்டிகர்:ஹரியானா மாநிலத்தில், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவால் வாங்கப் பட்டு, பின், டி.எல்.எப்., நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்ட, 3.5 ஏக்கர் நிலத்துக்கு வழங்கப்பட்ட, வீட்டுமனை உரிமத்தை ரத்து செய்யும் நடைமுறையை, அம்மாநில அரசு துவக்கி உள்ளது.

ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலம் அருகே உள்ள குர்கானில், காங்., தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான, ராபர்ட் வாத்ரா, 2008ல், 3.5 ஏக்கர் நிலத்தை, 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கினார்.இந்த நிலம், இவருக்கு சொந்தமான, 'ஸ்கைலைட் ஹாஸ்பிட்டாலிட்டி' என்ற நிறுவனத்தின் பெயரில் வாங்கப்பட்டது.

இந்த இடத்தை, வீட்டு மனைகளாக விற்பனை செய்ய, ஹரியானா மாநில, நகர்ப்புற திட்டமிடல் துறை, அனுமதி அளித்தது. அனுமதி கிடைத்த இரண்டு மாதத்தில், அந்த நிலத்தை, டி.எல்.எப்., என்ற கட்டுமான நிறுவனத்துக்கு, 58 கோடி ரூபாய்க்கு, ராப்ர்ட் வாத்ரா விற்பனை செய்தார். வாத்ரா - டி.எல்.எப்., இடையே நடந்த இந்த நில பேரத்தை, அப்போதைய பதிவுத் துறை இயக்குனராக பதவி வகித்து வந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் கெம்கா, 2012ல் ரத்து செய்தார்.

இந்நிலையில், வாத்ரா வாங்கிய, 3.5 ஏக்கர் நிலத்தை, வீட்டு மனைகளாக விற்பனை செய்ய, வழங்கப்பட்ட உரிமத்தை, ரத்து செய்யும் நடைமுறையை, அம்மாநில அரசு துவக்கி உள்ளதாக, நகர்ப்புற திட்டமிடல் துறை அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
20-செப்-201918:52:48 IST Report Abuse
Nakkal Nadhamuni என்ன கொடுமையடா இது, அதர்மத்துக்கு வந்த சோதனை.... எல்லாத்துக்கும் காரணம் அந்த கவுல் பிராமணன்தான்...
Rate this:
Share this comment
Cancel
Ramaraj P -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201917:03:52 IST Report Abuse
Ramaraj P எல்லாமே கனகச்சிதமாக சட்ட படி தானே பண்ணியிருக்காப்டி
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
20-செப்-201916:41:25 IST Report Abuse
Endrum Indian என்னப்பா ஜோக் அடிக்கிறீங்க வெறும் வெறும் 3.5 ஏக்கர் அப்போ அவன் கிட்டே இருக்கின்ற 3500 ஏக்கர் அப்படியே இருக்கா?? இதைத்தான் சொல்வது அறிவுக்கொழுந்து அரசு என்று????3.5 ஏக்கர் 7 கோடிக்கு வாங்கி 58 கோடிக்கு விற்பனை, அப்போ மேற்கூட்டு வரி இதற்கு போட்டார்களா இல்லையா?? Capital Appreciation Tax
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X