அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாங்குநேரி இடைத்தேர்தல் பணிகளை துவக்கியது தி.மு.க.,

Added : செப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

திருநெல்வேலி, திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல் பணிகளை தி.மு.க.,வினர் நேற்று துவக்கினர்.நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் (காங்.,) கன்னியாகுமரி தொகுதி எம்.பி.,யாக தேர்வானார். இதனால் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கிறது. அங்கு காங்., மீண்டும் போட்டியிடுமா அல்லது தி.மு.க.,வா என முடிவு செய்யவில்லை.இந்நிலையில் தி.மு.க.,துணைப்பொதுச்செயலர் ஐ.பெரியசாமி தலைமையில் நேற்று தேர்தல் பணிகள் துவங்கின.சீவலப்பேரியில் நேற்று கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்தார். எம்.பி., ஞானதிரவியம், எம்.எல்.ஏ., மைதீன்கான், மாவட்ட செயலர்கள் ஆவுடையப்பன், அப்துல்வகாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தினமும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கட்சியினரை சந்தித்து வருகின்றனர்.பெரியசாமி கூறுகையில், ''இடைத்தேர்தல் பணிகளை துவக்கியுள்ளோம். முந்தைய தேர்தலை விட அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றிபெறுவோம்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar Rengarajan - Trichy,இந்தியா
20-செப்-201922:22:58 IST Report Abuse
Sridhar Rengarajan ஸ்டாலின் அவர்களே கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் வெற்றி பெற்றால் விவசாயக்கடன், கல்விக்கடன் ரத்து செய்வதோடு நகைக்கடனையும் தள்ளுபடி செய்வோம் என்று பிரச்சாரம் செய்திர்கள். ஒங்க வேட்பாளர்கள் இன்னும் ஒரு படி மேல போய் கடன் எதையும் கட்டாதீர்கள், நகைக்கடன் வாங்கி கொண்டு ரசீதை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். நாங்கள் வந்து பைசா பாக்கி இல்லாமல் தள்ளுபடி செய்வோம் என்று சொன்னதை கேட்டு கடைசி நேரத்தில் வரிசையில் நின்று இருந்த நகையை அடமானம் வைத்தார்கள். இப்போது நாங்குநேரியில் கந்துவட்டி கடன் தள்ளுபடி செய்வோம்னு சொல்லலாமே. ஜனங்க எப்படி இது சாத்தியம்னு கேள்வியா கேட்கபோறாங்க. ச்சும்மா அள்ளி உடுங்க. இது ஒங்க கம்பெனிக்கு புதுசா என்ன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X