சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேலை நிறுத்த போராட்டம் 2,000 லாரிகள் ஓடவில்லை

Added : செப் 19, 2019
Advertisement

கடலுார்:கடலுார் மாவட்டத்தில் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக 2000 லாரிகள் ஓடவில்லை. மத்திய அரசு சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையை அதிகமாக உயர்த்தியுள்ளது. இதனை குறைக்க வேண்டுமன, வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் காங்., ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, கடலுார் மாவட்டத்தில் 2000 லாரிகள் ஓடவில்லை.இது குறித்து லாரி உரிமையாளர் சங்க தலைவர் சங்கர் கூறுகையில், கடலுார் மாவட்டத்தில் இருந்து குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு லாரிகள் இயக்கப்படுகிறது. வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மாவட்டத்தில் 2000 லாரிகள் ஓடவில்லை. இதனால், 25 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X