சாமியார் வேடமிட்டு கோவில்களில் கொள்ளை | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாமியார் வேடமிட்டு கோவில்களில் கொள்ளை 

Added : செப் 19, 2019 | கருத்துகள் (1)
சாமியார் வேடமிட்டு கோவில்களில் கொள்ளை 

நாகர்கோவில், சாமியார் போல் வேடமிட்டு கோவில்களில் கொள்ளையடித்த நபர் உள்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வண்டாவிளை இசக்கியம்மன் மற்றும் கன்னக்குறிச்சி முத்தாரம்மன் கோவில்களில் கடந்த மாதம் தங்க நகைகள் குத்து விளக்கு ஆகியவை திருடு போனது.ராஜாக்கமங்கலம் போலீசார் நல்லுார் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் 30 உள்பட 18 19 வயதுடைய மூவரை நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கோவில்களில் திருடிய 9 சவரன் நகைகள் மற்றும் 20 குத்து விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.பிடிபட்டவர்களில் செல்வகுமார் சாமியார் போல் வேடமிட்டு கோவில்களில் கொள்ளையடித்து வந்தது தெரிய வந்தது.கொள்ளையில் தொடர்புடைய மேலும் மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X