சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் எடுக்க வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

Added : செப் 19, 2019
Advertisement
 மணல் எடுக்க வந்த அதிகாரிகள் தடுத்து நிறுத்தம்

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் அருகே, பிரதமரின் வீடு கட்டும் பயனாளிகளுக்காக, பெண்ணையாற்றில் மணல் எடுக்க வந்த அதிகாரிகளை, மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் அண்ணாகிராமம், கடலூர் பண்ருட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட 5 ஆயிரம் பேருக்கு பிரதமரின் வீடுகட்டும் திட்டத்தில், வீடு கட்ட அனுமதி வழங்கியுள்ளனர். இந்த திட்டத்தில் அனுமதி பெற்ற பயனாளிகள், மணல் கிடைக்காததால் குறிப்பிட்ட காலத்துக்குள் வீட்டை கட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே பயனாளிகளுக்கு அரசு மான்யம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போகும் நிலை உள்ளது. எனவே, கலெக்டர் உத்தரவின் பேரில், வீடு கட்டும் பயனாளிகளுக்கு நெல்லிக்குப்பம் அடுத்த விஸ்வநாதபுரம் பெண்ணையாற்றில் மணல் எடுக்க டிராக்டர்களுடன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன்,சக்தி வந்தனர்.இதையறிந்த அப்பகுதி மக்கள் வண்டிகளை மறித்து அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டி.எஸ்.பி., நாகராஜன் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு பேச்சுவார்த்தை நடத்தினர்.'இந்த பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட தமிழக அரசுக்கு பொதுப்பணித்துறை மூலம் திட்ட மதிப்பீடு சென்றுள்ளது. இங்கு மணல் எடுத்தால் தடுப்பணை கட்ட மாட்டார்கள்.மணல் எடுத்தால் நிலத்தடிநீர் பாதிக்கும். வருவாய்துறை மூலம் இங்கு மணல் எடுக்ககூடாது என்பதற்காக ஆற்றின் குறுக்கே பள்ளம் வெட்டினர். வேண்டுமானால் ஒரு கிலோமீட்டர் துாரத்தில் பொதுப்பணித்துறை மணல் குவாரி நடத்திய இடத்தில் மணல் எடுத்து கொள்ளுங்கள்' என பொதுமக்கள் கூறினர்.பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் மணல் எடுக்க முடியாது என்பதால், நான்கு மணி நேரமாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்கள் உறுதியாக இருந்ததால் வேறுவழியின்றி வண்டிகளை திருப்பி அனுப்பிவிட்டு அதிகாரிகளும் திரும்பி சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.விஸ்வநாத புரத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததால் திரும்பி சென்ற அதிகாரிகள், நெல்லிக்குப்பம் அடுத்த அழகியநத்தம் பெண்ணையாற்றில் இருந்து மணல் எடுக்க முடிவு செய்தனர்.அதன்படி நேற்று மாலை அழகியநத்தம் பெண்ணையாற்றில் இருந்து வீடு கட்ட அதிகாரிகள் முன்னிலையில் 20 டிராக்டர்களில் மணல் எடுக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X