சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வழித்தடத்தை அபகரிக்க முயற்சி: வி.ஏ.ஓ., அலுவலகம் முற்றுகை

Added : செப் 19, 2019
Advertisement

மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, மைவாடி கிராம விவசாயிகள், கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.மைவாடி கிராமத்தில், விளைநிலங்களுக்கு மத்தியில், விவசாயிகள் வசிக்கும் தோட்டத்து சாளைகள் அதிகம். இங்கு பல ஆண்டுகளாக, மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறிக்கும் முயற்சியில், தனிநபர் ஈடுபடுவதாக புகார் எழுந்தது.
இந்த பிரச்னையை முன்வைத்து, நேற்று காலை 11:00 மணிக்கு, மண்ணெண்ணெய் 'கேன்' களுடன், கிராமநிர்வாக அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர். பின்னர், வாசலில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.விவசாயிகள் கூறுகையில்,'மைவாடியிலிருந்து வடக்கு பகுதியில், தார்ரோடிலிருந்து பிரிந்து, பக்கவாட்டு பகுதியிலுள்ள, தோட்டத்துசாளைகளுக்கு செல்லும் மண் பாதையை, 70 ஆண்டுகளாக பயன்படுத்தி வருகிறோம். இதற்கான ஆவணங்கள் உள்ளன.
தற்போது இந்த பாதையை, வழிமறிக்கும் முயற்சியில் தனிநபர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். சர்வேயர் மூலம் நில அளவீடு பணி நடக்க உள்ளது. இதை தடுக்க வேண்டும். தவறினால், தீக்குளிக்கும் முடிவோடு வி.ஏ.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டுள்ளோம்,' என்றனர்.பணியில் இருந்த வி.ஏ.ஓ., சித்ராதேவி போராட்டம் நடத்தியவர்களிடம் சமரசம் பேசினார். பின்பு, நில அளவீட்டு பணியை நிறுத்துவதாக, உறுதி கொடுத்தார். மனுவையும் பெற்றுக்கொண்டதால், விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X