சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாய சங்கத்தினர் போராட்டம்

Added : செப் 19, 2019
Advertisement

திட்டக்குடி:திட்டக்குடி அருகே நெடுஞ்சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோர மரங்கள் அகற்றுவதை கண்டித்து, விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
விருதை - ராமநத்தம் மாநில நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள், ரூ. 49 கோடி மதிப்பில் நடக்கிறது. இதில் திட்டக்குடி, கோழியூர், பட்டூர் கிராமங்களின் சாலையோர மரங்களை அகற்றும் பணியில் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டனர்.இதை கண்டித்து வெலிங்டன் நீர்தேக்க பாசன சிறு,குறு விவசாயிகள் சங்க தலைவர் பேரின்பம் தலைமையில், நேற்று காலை 11.30 மணிக்கு, மரத்தின் மீது ஏறி, விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த நெடுஞ்சாலைத்துறை உதவிபொறியாளர் அருண்குமார், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் ஸ்ரீப்ரியா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மரத்தை அகற்றுவதற்கான உதவி கலெக்டரின் உத்தரவை காண்பித்தனர். இதில் திருப்தியடையாத விவசாயிகள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பசுமைத்துாண்கள் அறிவழகன், கதிர்மாயவேல், செந்தமிழ் மரபுவழி இயற்கை வேளாண் நடுவம் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் மழைபெய்த நிலையிலும் போராட்டத்தை தொடர்ந்தனர்.தலைமையிடத்து துணை தாசில்தார் ஜெயச்சந்திரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணவும், அதுவரை மரங்கள் வெட்டும்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என தெரிவித்தார். இதையேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மாலை 5:00 மணிக்கு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X