சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வீடு புகுந்து திருட்டு இரண்டு பேர் கைது

Added : செப் 19, 2019
Advertisement

கடலுார்:கடலுாரில் தலைமை ஆசிரியை வீட்டில் திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் அடுத்த கோண்டூரை சேர்ந்தவர் ராஜசேகரன்,58; முன்னாள் அரசு பள்ளி தலைமை ஆசிரியர். இவரது மனைவி ஜெயா,55; வரக்கால்பட்டு அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியை. இவர், வழக்கம் போல் நேற்று முன்தினம், பள்ளிக்கு சென்றார். ராஜசேகரன் வெளியில் சென்றிருந்தார்.மாலை மர்ம நபர்கள், ராஜசேகரன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து திருடியுள்ளனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஒருவரை மடக்கி பிடித்து, புதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில், அவர் கடலுார் பில்லாலி தொட்டியை சேர்ந்த மணி மகன் சூர்யா, 24; என்பது தெரிந்தது. இவர், கொடுத்த தகவலின் பேரில் கடலுார், சாவடி பஸ் நிறுத்தம் அருகில், நடந்து வந்த நெல்லிக்குப்பம், எய்தனுாரைச் சேர்ந்த ஜெயமூர்த்தி மகன் விக்கி (எ) விக்னேஸ்வரனை, 24; போலீசார் நேற்று கைது செய்தனர். இருவரிடம் இருந்து, ராஜசேகரன் வீட்டில் திருடிய 5 சவரன் தங்க காசுகள், எல்.ஈ.டி., 'டிவி' ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு, 1.90 லட்சம் ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X