பொது செய்தி

தமிழ்நாடு

மாற்று ரேஷன் கார்டு விநியோகம் துவக்கி வைத்தார் முதல்வர்

Updated : செப் 20, 2019 | Added : செப் 19, 2019
Share
Advertisement
 மாற்று, ரேஷன் கார்டு, விநியோகம், துவக்கி, வைத்தார் முதல்வர்

சென்னை:ரேஷன் கார்டில் திருத்தங்கள் செய்தவர்களுக்கு, 'டூப்ளிகேட்' எனப்படும், மாற்று ரேஷன் கார்டு வழங்கும் பணியை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி வைத்தார்.

தமிழகத்தில், 2017 முதல், 'ஆதார்' எண் அடிப்படையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த கார்டுகள், சென்னையில் அச்சிடப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதனால், கார்டுகள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதை தவிர்க்க, மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், ரேஷன் கார்டுகள் அச்சிட்டு வழங்கப்பட உள்ளன.

அதன்படி, ஏற்கனவே உள்ள கார்டில் திருத்தங்கள் செய்தவர்களுக்கு, மாற்று ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி நேற்று துவங்கியது. தலைமை செயலகத்தில், ஐந்து பேருக்கு மாற்று ரேஷன் கார்டுகள்வழங்கி, முதல்வர், இ.பி.எஸ்., இப்பணியை துவக்கி வைத்தார்.

இனி, புதிதாக ரேஷன் கார்டு கோரும் பயனாளிகளுக்கு, மாவட்டங்களில் அச்சிட்டு, இலவசமாக வழங்கப்படும். ஏற்கனவே உள்ள கார்டில் திருத்தங்கள் கோரும் பயனாளிகள், 20 ரூபாய் கட்டணம் செலுத்தி, மாற்று கார்டுகளை, உணவு வழங்கல் துறை அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.


கிடங்குகள் திறப்பு



தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில், வேலுார், கடலுார், மதுரை, திருநெல்வேலி மாவட்டங்களில், 12.76 கோடி ரூபாய் செலவில், 14 சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள், ராஜு, காமராஜ், தலைமை் செயலர், சண்முகம் ஆகியோர் பங்கேற்றனர்.


காவல், தீயணைப்பு கட்டடங்கள் திறப்பு



சென்னை, :தமிழகத்தில், 70 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள, காவல் மற்றும் தீயணைப்பு துறை கட்டடங்களை, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று திறந்து வைத்தார்.சென்னை, திருநெல்வேலி, சிவகாசி, திருத்தணி, அரக்கோணம் ஆகிய இடங்களில், 162 காவலர் குடியிருப்புகள், மூன்று காவல் நிலையங்கள், இரண்டு காவல் துறை இதர கட்டடங்கள்; இரண்டு தீயணைப்பு நிலையங்கள்; தீயணைப்பு துறையினருக்கான, 13 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.இவை அனைத்தையும், முதல்வர், இ.பி.எஸ்., சென்னை, தலைமை செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக திறந்து வைத்தார்.


வாழ்த்து



சீனாவின், செங்குடு நகரில், ஆக., 8 முதல், 18 வரை, உலக காவல் துறை மற்றும் தீயணைப்பு துறை விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. தமிழக காவல் துறை சார்பில், இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் மேரி, சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, ஏட்டு பாலு, முதல் நிலை காவலர்கள், தமிழரசி, கிருஷ்ணரேகா, அதிர்ஷ்டம், காவலர்கள் பிரமிளா, உமாமகேஸ்வரி, தங்கவசந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

அவர்கள், ஒன்பது தங்கம், 16 வெள்ளி, ஏழு வெண்கல பதக்கங்களை வென்று, சாதனை படைத்தனர். சென்னையில், முதல்வர், இ.பி.எஸ்.,சை நேற்று சந்தித்து, அவர்கள் வாழ்த்து பெற்றனர்.8 பேருக்கு அரசு பணிதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 'குரூப் - 1' தேர்வு வழியே, தீயணைப்பு துறையில், மாவட்ட அலுவலர் பணியிடங்களுக்கு, எட்டு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., நேற்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X