சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருச்செந்துார் கோவிலில் திருட்டு

Added : செப் 19, 2019
Advertisement

சென்னை, : திருச்செந்துார் கோவிலில், மூலவரை நோக்கி உள்ள மயில் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த, விலை மதிப்பற்ற கற்கள் திருடு போனது குறித்து, சி.பி.ஐ., விசாரணை கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.சேதம்சென்னையைச் சேர்ந்த, வழக்கறிஞர், எஸ்.ஸ்ரீதரன் தாக்கல் செய்த மனு:திருச்செந்துார் சுப்ரமணியசாமி கோவிலின் பக்தர் ஒருவர், கடிதம் ஒன்றை எனக்கு அனுப்பி இருந்தார்.கோவில் நடை மூடிய பின், மூலவரை நோக்கி உள்ள மயில் சிலையை அகற்றி விட்டு, அதன் கீழே வைக்கப்பட்டிருந்த, விலை மதிப்பற்ற கற்கள் மற்றும் உலோகங்களை, சிலர் திருடிச் சென்று விட்டதாக, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.கடந்த, ௨௦௧௭ ஆக., ௬ இரவு, இச்சம்பவம் நடந்ததாக கூறியுள்ளார்.மயில் சிலையை மீண்டும் அங்கு வைத்த போது, தலைப்பாகம் சேதம் அடைந்துள்ளது. அதனால், வெள்ளை துணியை வைத்து, சிலையை மூடி உள்ளனர். சிலையை தொடுவதற்கு, யாரையும் அனுமதிக்கவில்லை.எந்த பதிலும் இல்லைசம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை கேட்டு, அரசுக்கு கடிதம் அனுப்பினேன். விலை மதிப்பற்ற பொருட்களை மீட்கவும், சம்பந்தப் பட்டோருக்கு எதிராக, நடவடிக்கை எடுக்கவும்கோரினேன்.இதுவரை, எந்த பதிலும் இல்லை. எனவே, சி.பி.ஐ., அல்லது வேறு ஏஜென்சியின் விசாரணைக்கு, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதிகள், எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X