அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழர்களுக்கு முன்னுரிமை வைகோ, அன்புமணி கோரிக்கை

Added : செப் 19, 2019
Advertisement

சென்னை, 'தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியிடங்களில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்' என, ம.தி.மு.க., பொதுச்செயலர், வைகோ, பா.ம.க., இளைஞரணி தலைவர், அன்புமணி ஆகியோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.வைகோ: ரயில்வே துறையில், காலியாக உள்ள, 'கேங் மேன்' மற்றும் சிக்னல் பணிகளுக்கான தேர்வு, தமிழகம் முழுவதும், 2018 செப்., முதல், டிசம்பர் வரை நடந்தது. மொத்தமுள்ள, 62 ஆயிரத்து, 907 பணியிடங்களுக்கான, இத்தேர்வில், மதுரைக் கோட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்ட, 572 பேரில், 11 பேர் மட்டும், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இத்தேர்வில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் பலர், தேர்ச்சி பெறவில்லை. எனவே, தமிழகத்தில் உள்ள ரயில்வே பணியிடங்களுக்கு, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.அன்புமணி: ரயில்வே துறையில், கடைநிலை பணிகள், உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தால், அனைத்து பணிகளும், தகுதி அடிப்படையில் தமிழர்களுக்கு கிடைத்திருக்கும். இந்த பணிகளை பெறுவது, தமிழர்களின் அடிப்படை உரிமை. ஒவ்வொரு மாநிலத்திலும், ரயில்வே உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களின், கடைநிலை பணிகள் முழுக்க முழுக்க, உள்ளூர் மக்களுக்கே ஒதுக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X