சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'பேஸ்புக்'கில் ஆபாச படம் கம்யூ., பிரமுகர் புகார்

Added : செப் 19, 2019
Advertisement

சென்னை, -'பேஸ்புக், வாட்ஸ் - ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், தன் படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிடுவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, பேராசிரியர், சுந்தரவள்ளி, போலீசில் புகார் அளித்துள்ளார்.சென்னை, அமைந்தகரையைச் சேர்ந்தவர், பேராசிரியர், சுந்தரவள்ளி. இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், நேற்று அளித்த புகார்:மார்க்சிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய அமைப்பில், மாநில துணைச் செயலராக உள்ளேன்.

சமூக வலைதளத்தில், மர்ம நபர்கள் சிலர், என் நடத்தை குறித்து, அவதுாறு பரப்பும் வகையில், கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். மேலும், என் படத்தை ஆபாசமாக சித்தரித்து, போலீசார் என்னை விபசார வழக்கில் கைது செய்ததாகவும், அதை பிரபல, 'டிவி' ஒன்றில் செய்தி வெளியிட்டு இருப்பது போலவும், 'வீடியோ' வெளியிட்டுள்ளனர்.இவர்கள் மீது, பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X