பொது செய்தி

தமிழ்நாடு

'லாரி டிரைவர் மீது பழி'; சுபஸ்ரீ விவகாரம் குறித்து நடிகர் விஜய்

Updated : செப் 19, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (40)
Share
Advertisement
#BigilAudioLaunch,vijay,actor,bigil,audio launch,பிகில்,ஆடியோ, வெளியீடு

சென்னை: சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல், லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகின்றனர் என நடிகர் விஜய் கூறினார்.


latest tamil news



அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 'பிகில்' திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் விஜய் பேசியதாவது: வாழ்க்கையும் ஒரு கால்பந்து போட்டி தான். நாம் கோல் போடுறதையும் தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம் கூட இருப்பவர்களே சேம்சைடு கோல் போடுவார்கள். யாருடையும் அடையாளத்தை எடுத்துக்காதீங்க.


latest tamil news



உழைத்தவர்களை மேடை ஏற்றி அழகு பார்க்கும் முதலாளி, ரசிகர்கள் தான். எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்க வேண்டும். அரசியலில் புகுந்து விளையாடுங்கள். ஆனால் விளையாட்டில் அரசியலை கொண்டு வராதீர்கள்.


latest tamil news



பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என் ஆறுதல். யார் மீது பழி போட வேண்டுமோ அதை செய்யாமல், லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகின்றனர். இது போன்ற சமூக பிரச்னைக்கு 'ஹேஷ் டேக்' போட வேண்டும். சமூக வலை தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும். இவ்வாறு விஜய் கூறினார்.


கமல் ஆதரவு



பேனரால் இறந்த சுபஸ்ரீ குறித்து விஜய் கூறிய கருத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவை விஜய் மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளார். தாய் மொழி மீது கை வைத்தால் மன்னிக்கமாட்டோம். இவ்வாறு சென்னையில் கமல் ஹாசன் அளித்த பேட்டியில் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-செப்-201915:11:09 IST Report Abuse
theruvasagan இப்ப தமிழ்நாட்டில் எந்த பரபரப்பான சம்பவம் நடந்தாலும் சில அரசியல் பண்ணத்துடிக்கும் கூத்தாடிகள் கருத்து கந்தசாமிகளாகி விடுகிறார்கள். இந்த கட்அவுட் பேனர் கலாசாரங்களை ஆரம்பித்து வைத்தது இவங்களும் தீம்காவும் தான. தமிழகத்தில் கெடுதலான விஷயம் ஒன்று புகுகிறது என்றால் அதை கொண்டுவருவது சினிமாகாரர்களும் தீயமுகவும்தான்.
Rate this:
Cancel
K Veerappan - Madurai,இந்தியா
20-செப்-201912:43:39 IST Report Abuse
K Veerappan மக்கள் இப்பொழுது மிகவும் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். சினிமாவில் நடிக்கிறதை மட்டும் விஜய் பண்ணட்டும். மற்ற விஷயங்களை அந்த அந்த துறையில் உள்ளவர்கள் பார்த்துக்கொள்வார்கள். நடு நிலையாக உள்ள வரையில் யார் வேண்டுமானாலும் கருத்து கூறலாம். தற்பொழுது விஜய்யோ அவரது அப்பா சந்திரசேகரோ அந்த மாதிரி இல்லை. எனவே அவர்கள் ஜோலியை மட்டும் பார்க்கட்டும்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-செப்-201911:29:51 IST Report Abuse
elakkumanan சோசப்பு தம்பி, யாரு மேல குத்தமுன்னு சொல்லலாம்ல? சரி, அப்படியே, அந்த லயோலா கல்லூரி ஓவிய கண்காட்சிக்கு அனுமதி கொடுத்தது யாருஅருமையா , இந்து மதத்தை பாராட்டி படம் வரிஞ்ச ஓவியர்கள் யாருனு கண்டுபிடிச்சு சொல்லுங்க.சோசப்பு தம்பி, ரசிகர்களை வைத்து பிழைப்பதை விட, அவர்களை பிழைக்க, குடும்பத்தை காக்க சொல்லுங்கள். உங்கள் மரியாதை கூடும். கொம்பு சீவுதல், பஞ்ச் பேசுதல் எதிர்மறை விளைவையே தரும். ஒங்க அப்பாரு , உங்களோட ஜென்ம சத்ரு. எல்லாத்தையும் மூடிக்கிட்டு இருந்தாருன்னா, ஒங்க சினிமா யாவாரம் தொடரும். நல்லாவே. இனி, நீங்கதான் முடிவு பண்ணனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X