எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் 2 தேசிய நெடுஞ்சாலை திட்டம் ரத்து

Updated : செப் 20, 2019 | Added : செப் 19, 2019 | கருத்துகள் (9)
Advertisement
நிலம்,கையகப்படுத்துவதில்,தாமதம்,2 தேசிய,நெடுஞ்சாலை,திட்டம் ரத்து

தமிழக அரசு, நிலம் கையகப்படுத்தி தராததால், இரண்டு புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கும் திட்டம் ரத்தாகி உள்ளது.
விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே, புதிதாக, நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் முடிவெடுத்தது. இதேபோல, அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி - சிதம்பரம் இடையே, இரண்டு சாலைகளை விரிவாக்கம் செய்வதற்கும் முடிவு செய்யப்பட்டது. மத்திய அரசின், பாரத்மாலா திட்டத்தின் கீழ், இதற்காக, 3,600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இந்த நிதியில், விழுப்புரம் - நாகப்பட்டினத்தை இணைப்பதற்கு, விழுப்புரம் - புதுச்சேரி, பூண்டியாங்குப்பம் - சட்டநாதபுரம் வரை, இரண்டு கட்டமாக பணிகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனத்துடன், 2018ல் ஒப்பந்தம் செய்யப்பட்டது.இதேபோல, மீன்சுருட்டி - சிதம்பரம் இடையே, இரண்டு வழிச்சாலை அமைக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த சாலை பணிகளுக்கு மொத்தம், 1,168 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது.

இந்த நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை, அந்தந்த மாவட்ட வருவாய் துறையினர் மேற்கொண்டனர். தற்போது வரை, 950 ஏக்கர் நிலம் மட்டுமே, கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பணிகளை துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், திட்டம் ரத்தாகியுள்ளது. இதுதொடர்பாக, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய இயக்குனர், நாகேந்திரநாத் சின்ஹா, தமிழக தலைமை செயலர், சண்முகத்திற்கு, சில நாட்களுக்கு முன், கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஒப்பந்தப்படி, ஒரு சாலை பணியை துவங்குவதற்கு, 80 சதவீத நிலத்தை, மாநில அரசின் வருவாய் துறையினர் கையகப்படுத்தி தர வேண்டும். இந்த மூன்று சாலை பணிகளுக்கும், 75 சதவீத அளவிற்கு நிலம் கையகப்படுத்த, இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், சிலர் நீதிமன்றம் சென்றுள்ளனர். இழப்பீட்டை பெற்று, நிலத்தை வழங்க, சிலர் மறுத்து வருகின்றனர்.

நிலத்தை கையகப்படுத்த முடியாததால், ஒப்பந்ததாரரால் பணி செய்ய முடியவில்லை. இதனால், ஒப்பந்ததாரருக்கு இழப்பீடு தர வேண்டிய நிலைக்கு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தள்ளப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு பின், இந்த ஒப்பந்தம் காலாவதி ஆகிவிடும்.அதன்பின், புதிதாக ஒப்பந்ததாரரை தேர்வு செய்து, பணிகளை துவங்க வேண்டும். அதற்குள், நிலங்களை கையகப்படுத்தினால் மட்டுமே, இந்த சாலைகள் அமைவது சாத்தியம். மாநில அரசின் கையில் தான் முடிவு உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
25-செப்-201912:13:50 IST Report Abuse
konanki போராளிகள் என்று தீய சக்திகளிடம் காசு வாங்கி கூவும் கூட்டம் இருக்கம் வரை தமிழ் நாட்டில் இந்த நிலை தான்
Rate this:
Share this comment
Cancel
konanki - Chennai,இந்தியா
25-செப்-201912:11:19 IST Report Abuse
konanki தமிழ் நாட்டிற்கு சாலைகள் வேண்டாம், தொழிற்சாலைகள் வேண்டாம், டிபென்ஸ் காரிடார் வேண்டாம், நீட் தேர்வு வேண்டாம்,தாங்கள் அரசு செய்த போது அனுமதி அளித்த திட்டங்கள் இப்போது எதிர் கட்சி ஆக இருக்கும் போது போராட்டம் செய்து வேண்டாம் என்று சொல்லும் அரசியல் கட்சிகள் வேண்டும், தமிழ் நாட்டில் ஒரு மெடிக்கல் சீட் 1 ,00,00,000 ரூபாய் என்று விற்று கள்ள பணம் சம்பாதித்து அதை இலங்கையில் முதலீடு செய்யும் "நல்லவர்கள்" வேண்டும். ஆனால் பொருளாதாரம் வளரவில்லை, வேலை வாய்ப்பு இல்லை எனவே மோடி ஒழிக, இந்த ஆட்சி விலக வேண்டும் என்று கூவுகிறவர்கள் வேண்டும். இதில உலகத்திலேயே புத்தி சாலிங்க தமிழர்கள் தான் என்று கூவல். தமிழ் நாட்டிற்கு வேண்டியது டாஸ்மாக் மட்டும் தான்
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
21-செப்-201910:04:08 IST Report Abuse
Apposthalan samlin அதிமுக என்றைக்கு போகுமோ அன்றைக்கு தான் தமிழகத்தில் நல்லாட்சி மலரும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X