சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அரசு இடத்தை தனியாருக்கு பட்டா பெண் தாசில்தார், 'சஸ்பெண்ட்'

Added : செப் 19, 2019 | கருத்துகள் (1)
Advertisement

கரூர், :கலெக்டர் அலுவலகத்திற்கு உரிய இடத்தை, தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்ததாக, கரூர் தாசில்தார் உட்பட மூவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த, 1995ல், கரூர் மாவட்டம் உருவானபோது, தாந்தோன்றிமலை அருகில், அரசு நிலம் போக, தனியாருக்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்தி, கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது.
அதில், 6.75 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளர்களுக்கு, 5.14 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், அரசு கையகப்படுத்தி, கலெக்டர் அலுவலக பயன்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட, 6.75 ஏக்கர் நிலத்தை, தனியார் பெயருக்கு, பட்டா போட்டு கொடுத்துள்ளது, தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக, கலெக்டர், அன்பழகன் விசாரணை நடத்தினார். அதில், அரசுக்கு சொந்தமான இடத்தை, தனியாருக்கு பட்டம் வழங்கிய, கரூர் தாசில்தார், அமுதா, 47, மற்றும் நிலஅளவையர், இருவரை, 'சஸ்பெண்ட்' செய்து, கலெக்டர் அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajaiah Samuel Muthiahraj - Canberra /kancheepuram,இந்தியா
20-செப்-201908:43:03 IST Report Abuse
Rajaiah Samuel Muthiahraj கரூரில் நடப்பத்தைமட்டும் விசாரணை நடத்தி உரிய அதிரடி நடவடிக்கை எடுக்கும்போது காஞ்சிபுரத்தில் அரசின் பொது இடம் மற்றும் மாமல்லன் நகரில் கீழ் முனையில் கே டி எஸ் மணி மகேந்திரபல்லவன் தெருவுடன் இணைக்கும் இருநூறு அடி சாலை அதனை ஒட்டியுள்ள பொது இடம் மற்றும் சத்தியா அவின்யூவிற்கு செல்லும் வீதி அனைத்தையும் ஆக்கிரமிப்பு செய்து விதிமீறல் கடடடம் எழுப்பியுள்ள முன்னாள் எம் எல் ஏ வின் மீது மட்டும் ஏன் நடவடிக்கை இல்லை பொது இடம் பத்திரப்பதிவு செய்த மாமல்லன் கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் செயலாளர் பத்திர பதிவாளர் ஊராட்சி நிர்வாகம் தாசில்டர் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ஊடகங்களும் இதனை ஏன் பிரசுரிப்பதில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X