வீட்டு கூரையில் இருந்து விழுந்தவர் பலி

Added : செப் 20, 2019
Advertisement

புதுச்சேரி:மழையால் சேதமான வீட்டு கூரையை சரி செய்தபோது, தவறி விழுந்த வட மாநில வாலிபர் இறந்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் சலீம்கான். 7 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி வந்தவர், நுாறடி சாலையில் உள்ள டைல்ஸ் கடையில் வேலை பார்த்து வருகிறார்.சலீம்கானை பார்ப்பதற்காக, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவரது மகன் சயீத்கான், 19, புதுச்சேரி வந்தார். கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் சலீம்கான் வசிக்கும் வீட்டின் மேற்கூரை சேதமடைந்து ஒழுகியுள்ளது. கடந்த 11ம் தேதி சலீம்கான், சயீத்கான் இருவரும் கூரை மீது ஏறி சரி செய்து கொண்டிருந்தனர்.அப்போது தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த சயீத்கான், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பெற்று வந்த சயீத்கான், நேற்று இறந்தார். முதலியார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் வீரபத்ரசாமி வழக்கு பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X