பொது செய்தி

இந்தியா

'இ - சிகரெட்' தடை அரசாணை வெளியீடு

Updated : செப் 20, 2019 | Added : செப் 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement
'இ - சிகரெட்' தடை அரசாணை வெளியீடு

புதுடில்லி: 'இ - சிகரெட்' தடைக்கான அவசர சட்டம் தொடர்பான அரசாணையை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது. 'எலெக்ட்ரானிக்ஸ் சிகரெட்' எனப்படும், இ - சிகரெட் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிப்பதற்கான அவசர சட்டத்துக்கு, மத்திய அரசு, நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இதற்கான சட்ட மசோதா, பார்லிமென்டின் அடுத்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை, முதல் முறையாக மீறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம், ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

தொடர்ந்து இந்த சட்டத்தை மீறினால், 5 லட்சம் ரூபாய் அபராதம் அல்லது மூன்று ஆண்டு சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.இந்த சட்டத்தின் படி, இ - சிகரெட் தயாரிப்பது, இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வது, விற்பனை செய்வது, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச் செல்வதுஆகியவை குற்றச் செயலாக கருதப்படும். இந்த அவசர சட்டத்துக்கான அரசாணையை, மத்திய அரசு நேற்று வெளியிட்டது.இ - சிகரெட்டில், புகையிலைக்கு பதிலாக, நிகோடின் மற்றும் ரசாயன கலவை அடங்கிய திரவம் நிரப்பப்பட்டிருக்கும். இ - சிகரெட்டில் உள்ள பேட்டரியை செயல்பட வைத்ததும், அதிலிருந்து ஏற்படும் வெப்ப ஆற்றலின் உதவியால், திரவம் ஆவியாகி, அதை பயன்படுத்துவோருக்கு, புகை பிடிப்பது போன்ற உணர்வு ஏற்படும்.இந்த, இ - சிகரெட்டில் உள்ள நிகோடினால், அவற்றை பயன்படுத்துவோருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக வந்த தகவல்களை அடுத்து, அதற்கு, மத்திய அரசு தடைவிதித்துள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yuvarajan -  ( Posted via: Dinamalar Android App )
20-செப்-201911:23:37 IST Report Abuse
Yuvarajan ஒரிஜினல் சிகரெட்டையும் தடை செய்யலாம். இ சிகரெட்டில் ஆவது அவன் மட்டும்தான் சாவான் ஆனால் ஒரிஜினல் சிகரெட்டில் பக்கத்தில் இருப்பவனின் சேர்ந்து சாவடிக்கிறான்.
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
20-செப்-201909:04:22 IST Report Abuse
சீனி ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட இந்த குப்பைகளை சீனாவுக்கே திருப்பியனுப்பிவிட்டால் சுற்றுச்சூழலுக்கு நல்லது. உற்பத்தி என்ற பெயரில் பல குப்பைகளை சீன நிறுவனங்கள் உலகம் முழுதும் அனுப்புகின்றன. நாம் வாங்கும் சார்ஜர்கள், கேபிள்கள், போன் கவர்கள் அனைத்துமே ஒரு நாள் குப்பையாக நம் விவசாய நிலத்தை போய் சேர்கிறது, எனவே முடிந்த அளவு பேஷனுக்கு வாங்காமல், தேவையானவற்றை மற்றும் குறைவாக வாங்கினால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
kalyanasundaram - ottawa,கனடா
20-செப்-201905:58:44 IST Report Abuse
kalyanasundaram HOW MANY TRUE MINISTERS EXPECTED TO BE ARRESTED
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
20-செப்-201913:13:03 IST Report Abuse
Cheran Perumalall ministers who were in manmogan ministry will get arrested...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X