திண்டுக்கல்: திண்டுக்கல் வெள்ளோடை சேர்ந்தவர் ரவிக்குமார் 29. சென்னமநாயக்கன்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் வினோத்குமார் 30. திண்டுக்கல் பெரியபள்ளப்பட்டி இந்திரா காலனியை சேர்ந்த பொன்னர் மகன் பாண்டி 39. இவர்கள் மூவர் மீதும் கடந்த ஏப்ரலில் அமைச்சர் சீனிவாசன் மகன் வெங்கடேஷ் என்பவர் வீடு உட்பட பல்வேறு இடங்களில் திருடியதாக வழக்குகள் உள்ளன.கடந்த ஆக.16-ம் தேதி மூவரையும் திண்டுக்கல் பழநி சாலையில் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் மேற்கு போலீசார் கைது செய்தனர். எஸ்.பி.சக்திவேல் பரிந்துரையின்பேரில், கலெக்டர் விஜயலட்சுமி மூவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.