சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கடத்திய மூவர் கைது

Added : செப் 20, 2019
Advertisement

வடமதுரை : கட்டாய திருமணம் செய்வதற்காக சிறுமியை கடத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் நடுப்பட்டியை சேர்ந்த 16 வயது பெண்ணும், அவரது தந்தையும் நேற்றுமுன்தினம் மாலை இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியபோது ஆம்னி வேனில் வந்த 5 பேர் சிறுமியை கடத்திச் சென்றனர்.தகவலறிந்த சுற்றுப்பகுதி கிராம மக்கள் அய்யலுார் அடுத்த கீரனுாரில் வேனைப் பிடிக்க முயன்றபோது கவிழ்ந்தது. சிறுமியை மீட்ட கிராமத்தினர், மூவரை பிடித்தனர். இருவர் தப்பியோடிவிட்டனர்.

தப்பி ஓடியவர்களையும் பிடித்தால் தான் சிக்கிய 3 பேரையும் ஒப்படைப்போம் எனக்கூறி ஒரு மணி நேரம் திண்டுக்கல் - திருச்சி நான்கு வழிச்சாலையில் கிராமத்தினர் மறியல் செய்தனர்.விசாரணையில், தப்பியோடியவர்களில், குழந்தைவேலு என்பவர் சிறுமியை திருமணம் செய்ய பெண் கேட்டு தர மறுத்த விஷயம் தெரிந்தது. அந்த நபர், தனது நண்பர்கள் அனியாப்பூர் செல்லபாண்டியன், பூமாலைப்பட்டி கிருபாகரன் 22, அமயபுரம் சூர்யா 31, தினேஷ் 21 ஆகியோர் உதவியுடன் சிறுமியை கடத்தியது தெரிந்தது.

கிருபாகரன், சூர்யா, தினேஷ் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இதே சம்பவத்தில் மூவரை தாக்கியதாக பொதுமக்கள் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X