பழநி : பழநி அருகே எரமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அஜய்நிர்மல்ராஜ் 29, கொடைக்கானல் வனக்காப்பாளர். பெருமாள்மலையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் காவலர் (தற்காலிகப்பணியாளர்) கண்ணன் 19, இருவரும் நேற்று இருசக்கரவாகனத்தில் (ெஹல்மெட் அணிந்திருந்தார்) கொடைக்கானல் ரோட்டில் சென்றனர். புளியமரத்துசெட் அருகே மாடு குறுக்கே வந்ததால் கீழே விழுந்ததில் அஜய்நிர்மல்ராஜ் இறந்தார். கண்ணன் பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE